Skip to main content
ஆழ்கடலில் வாழும் மீன் மேலே வந்து மடிந்தது ஏன்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆழ்கடலில் வாழும் மீன் மேலே வந்து மடிந்தது ஏன்?

வாசிப்புநேரம் -
ஊசி போன்ற பற்கள்...கவர்ச்சியற்ற நிறம்...

ஆழ்கடலில் வாழும் தூண்டில் மீனைக் காண்பது மிகவும் அரிது.

ஜனவரி 26ஆம் தேதி அது ஸ்பெயினின் டெனரிஃப் தீவுக்கு அருகே காணப்பட்டது.

மேற்பரப்புக்கு வந்த மீன் சில மணி நேரத்தில் மடிந்தது.

அது மேற்பரப்புக்கு வந்து மடிந்தது ஏன்? ஆய்வாளர்களுக்கு அது இன்னும் மர்மமாகவே உள்ளது.

செய்தியறிந்த இணையவாசிகள் பலர் கவலையிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை.

"6 செண்டிமீட்டர் நீளமான சிறிய மீன்தான்...எவ்வளவு உயரம் நீந்தியிருக்கும்?" என்று சிலர் புலம்புகின்றனர்.

ஆழ்கடலிலிருந்து ஏன் மேலே வந்தது என்பதற்கு இணையவாசிகள் ஊகங்களை முன்வைக்கின்றனர்.

"இருளிலிருந்து தப்பித்து வெளிச்சத்தைக் காண எண்ணியிருக்கலாம்.."

ஒருவர் மீனின் கதையை வைத்து உயிரோவியக் காணொளியை உருவாக்கினார்...

ஒருவர் பச்சை குத்திக்கொண்டார்...

சிலர் மீனைக் கருப்பொருளாக வைத்துக் கவிதை எழுதினர்.

கடலில் 200 மீட்டர் ஆழத்துக்கும் 2,000 மீட்டர் ஆழத்துக்கும் இடையே வாழும் தூண்டில் மீன் பொதுவாக இருக்கும் இடத்திலிருந்து நகர்வதில்லை.

பெண் மீன்களின் தலையில் பாக்டீரியாவால் ஒளியூட்டும் பகுதி உள்ளது. அந்த ஒளியைக் கொண்டு மீன் இரையைத் தன் வாய்க்குள் இழுத்துக்கொள்ளும்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்