Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஒட்டகம், கிளி, பாண்டா, பூனை, ஆக்டோபஸ்....உலகக் கிண்ணக் காற்பந்து முடிவுகளைக் கணித்த விலங்குகள்!

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. 

எந்த அணி வெற்றி பெறும்? - கணிப்புகள் இப்போதே சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

ஆனால் மனிதர்கள் மட்டும் முன்னுரைப்பதில்லை. 

விலங்குகளும் தான்.

2010ஆம் ஆண்டிலிருந்து ஆக்டோபஸ், ஒட்டகம், பாண்டா,  எனப் பல்வேறு விலங்குகள் 
ஆட்ட முடிவுகளை முன்னுரைத்துள்ளன. சிங்கப்பூரைச் சேர்ந்த கிளியும் அவற்றுள் ஒன்று. 
 

AFP

பால் (Paul) என்ற ஆக்டோபஸ்

 2010ஆம் ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் பால் 8 ஆட்டங்களின் முடிவுகளை முன்னுரைத்தது.  

எப்படி? 

நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்ட 2 பெட்டிகளிலிருந்து பால் ஒன்றைத் தேர்ந்தெடுத்தது.

கணிப்பு சரியாக இருந்ததா?

அது தேர்ந்தெடுத்த நாட்டின் அணியே ஆட்டத்தில் வெற்றி வாகை சூடியது.

அவ்வாறு இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வெற்றிபெறும் என்று பால் சரியாகக் கணித்தது!

AP

மணி எனும் கிளி

சிங்கப்பூரைச் சேர்ந்த மணி 2010ஆம் ஆண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பாலுக்கு நிகரான புகழைப் பெற்றிருந்தது.  

எப்படி? 

கிளி ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் அட்டைகள் போன்று அதற்கு சில அட்டைகள் கொடுக்கப்பட்டன. நாட்டின் கொடி அச்சிடப்பட்ட அட்டை ஒன்றை மணி தேர்ந்தெடுத்தது.

கணிப்பு சரியாக இருந்ததா?

அவ்வாறு அரை இறுதிச் சுற்றில் ஸ்பெயின் அணி வெற்றி பெறும் என்று அது சரியாகக் கணித்தது. 

இருப்பினும் இறுதிச் சுற்றில் கிளி கணித்ததைப் போல் ஹாலந்து வெற்றி பெறவில்லை.

YouTube/Gulf News

ஷஹீன் எனும் ஒட்டகம்

2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஒட்டகம் துல்லியமான கணிப்புகளை வழங்கியதற்கு பிரபலமானது. 

எப்படி?

Twitter/vanpacos

நாடுகளின் கொடிகள் இணைக்கப்பட்ட இரண்டு அறிவிப்புப் பலகைகளுக்கு முன் ஒட்டகம் வைக்கப்பட்டது. ஷஹீன் பலகைகளில் ஒன்றைக் கடித்தபோது எந்த அணி வெற்றி பெறும் என்பது முன்னுரைக்கப்பட்டது. 

கணிப்பு சரியாக இருந்ததா?

அது போட்டியின் முதல் ஆட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறும் என்று சரியாகக் கணித்தது.
 

(CNA / Gaya Chandramohan)

பாண்டா

2014ஆம் ஆண்டில் சீனாவில் ராட்சதப்  பாண்டாக் குட்டிகளைக் கொண்டு ஆட்ட முடிவுகளைக் கணிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எப்படி?

கரடிகளுக்கு உணவு நிரம்பிய இரண்டு கூடைகள் வழங்கப்படும்...அதில் ஒன்றை பாண்டா தேர்ந்தெடுக்கும்போது வெற்றி பெறும் அணி கணிக்கப்படும்… 

கணிப்பு சரியாக இருந்ததா?

ஆனால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

குட்டிகள் பிரபலம் அடைந்தால் அளவுக்கு அதிகமான மனிதர்களின் கவனத்தைக் கண்டு அவை அஞ்சலாம் என்ற அதிகாரிகள் அக்கறை தெரிவித்தனர்.

AFP

அச்சிலிஸ் எனும் பூனை

அச்சிலிஸ் 2018ஆம் அண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப்  போட்டியில் பிரபலமானது. செவியாற்றல் இல்லாத அந்த பூனை ரஷ்யாவின் அரும்பொருளகத்தில் வாழ்கிறது.   

எப்படி?

நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்ட 2 கிண்ணங்களிலிருந்து பூனை ஒன்றை தேர்ந்தெடுத்து வெற்றி பெறும் அணியைக் கணித்தது. 

AFP

கணிப்பு சரியாக இருந்ததா?

அது போட்டியின் முதல் ஆட்டத்தில் ரஷ்யா வெற்றி பெறும் என்று சரியாகக் கணித்தது.

இம்முறை?

இவ்வாண்டின் போட்டியில் முடிவுகளைச் சரியாகக் கணிக்கக்கூடிய விலங்கு தோன்றுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa