Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எறும்புக் கூட்டத்தின் 'தங்கக் கொள்ளை' - எந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது?

வாசிப்புநேரம் -

தங்கக் கொலுசு ஒன்றை எறும்புக் கூட்டம் எடுத்துச் செல்லும் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

"தங்கக் கொள்ளைக் கூட்டம்", "சிறு திருடர்கள்", "அழகுத் திருடர்கள்", இவர்களை எந்தச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பது?" "கொள்ளைக் கூட்டத் தலைவனைக் கண்டுபிடிக்கவேண்டும்." என்று உற்சாகத்துடன் இணையவாசிகள் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

அந்தக் காணொளி இதுவரை 150,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

காணொளியில் ஓர் எறும்புக் கூட்டம் ஒன்று சேர்ந்து ஒரு தங்கக் கொலுசைத் தூக்கிச் செல்கிறது.

உண்மையில் சம்பவம் கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் 2021ஆம் ஆண்டு நடந்திருக்கிறது.

அதை வெளியிட்ட ViralHog எனும் காணொளி நிறுவனம், "அம்மாவின் கொலுசைக் காணவில்லை....வீடு முழுவதும் தேடினோம். கடைசியில் ஓர் எறும்புக் கூட்டம் கொள்ளையடித்துச் செல்வதைக் கண்டோம்." என்ற வாசகத்துடன் வெளியிட்டிருந்தது.

ஆனால் அந்தக் காணொளி இம்முறை மீண்டும் வெளியிடப்பட்டபோது, இணையவாசிகளிடையே பிரபலமானது.

எறும்புக் கூட்டத்தின் விடாமுயற்சி, ஒற்றுமை ஆகியவற்றையும் பலர் புகழத் தவறவில்லை.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்