Skip to main content
உடல் எடை, நீரிழிவுக்குத் தீர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உடல் எடை, நீரிழிவுக்குத் தீர்வு - $3 மட்டுமே?

வாசிப்புநேரம் -
உடல் எடை, நீரிழிவுக்குத் தீர்வு - $3 மட்டுமே?
கோப்புப்படம்: AFP/Mario Tama
உடற்பருமன், நீரிழிவு நோய்க்கு எதிரான பிரபலமான மருந்து ஒன்றை வெறும் 3 அமெரிக்க டாலருக்கு உற்பத்தி செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இம்மாத இறுதியில் மருந்துக்கான காப்புரிமை காலாவதியான பின்னர், அது 3 டாலருக்கு (சிங்கப்பூர் வெள்ளி 3.81) கிடைக்கக்கூடும்.

இது குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்த பெரும் வாய்ப்பை வழங்கும்.

நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனத்தின் ஒசெம்பிக் (Ozempic), விகொவி (Wegovy) சிகிச்சைகளில் உள்ள முக்கிய மூலக்கூறான சமெக்லுடைட் (Semaglutide), நோயாளிகளுக்குக் கணிசமான எடை குறைவை ஏற்படுத்துகிறது.

இது நீரிழிவு, உடற்பருமன் தொடர்பான பிற மருத்துவப் பிரச்சினைகளை நிர்வகிப்பதில் பெரிதாக உதவுகிறது.

Semaglutide இம்மாத இறுதியில் பிரேசில், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் காப்புரிமைப் பாதுகாப்பை இழக்கும்.

150 நாடுகளில், Semaglutide காப்புரிமையே பெறாததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அண்மையில் காப்புரிமைக் காலாவதியான பிற மருந்துகளின் விலைத் தகவல்களைப் பயன்படுத்தி, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, நியூசிலந்தில் உள்ள ஆய்வாளர்கள் Semaglutide-க்கு என்ன உற்பத்தி விலை வைக்கலாம் என்று கணக்கிட்டனர்.

உற்பத்தி விலையைத் தொடர்ந்து நிலைநிறுத்தக்கூடிய அளவுக்குக் குறைத்தால், மில்லியன்கணக்கான மக்கள் சிகிச்சையைப் பெற முடியும் என்று இந்த ஆய்வின் ஆசிரியர் குறிப்பிட்டார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்