Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இந்தியாவில் யானைகள் ஏற்படுத்தும் மரணங்களைக் குறைக்கும் புதிய செயலி

வாசிப்புநேரம் -
இந்தியாவின் அசாம் (Assam) மாநிலம் யானைகளால் ஏற்படும் மரணங்களைக் குறைக்கப் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அது குறித்து BBC தகவல் தெரிவித்தது.

'Haati' எனும் அந்தச் செயலி வழி யானைகள் கூட்டம் அருகே இருக்கும்போது மனிதர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும்.

செயலியை 'Aaranyak' எனும் பல்லுயிர்ச்சூழல் அமைப்பு உருவாக்கியதாக BBC தெரிவித்தது.

யானை தாக்கியதால் காயங்களோ மரணமோ ஏற்பட்டால் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு பெறுவதற்கான ஆவணமும் செயலியில் உள்ளது.

இந்திய மாநிலங்களில் ஆக அதிகமான யானைகளின் எண்ணிக்கை அசாமில் உள்ளதாக BBC தெரிவித்தது.

அதனால் மனிதர்களும் யானைகளும் தொடர்புகொள்ளும்போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகம்.

கடந்த நான்காண்டில் யானைகளால் சுமார் 1,700 பேர் மாண்டதாக Hindustan Times நாளேடு மார்ச் மாதம் தெரிவித்திருந்தது.

அசாமில் உள்ள யானைகளின் வசிப்பிடங்கள் குறைந்துவருவதால் யானைகள் முரட்டுத்தனமாக நடந்துகொள்கின்றன என்று சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்