Apple CarPlay - என்ன அது?
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Apple நிறுவனம், சொகுசு கார் தயாரிப்பாளரான ஆஸ்டன் மார்டினுடன் (Aston Martin) கூட்டுச் சேர்ந்து அதன் புதிய Apple CarPlay ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
CarPlay Ultra பாதுகாப்பான, தடையற்ற சுகமானதொரு வாகனமோட்டும் அனுபவத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.
ஆஸ்டன் மார்டின் வாகனங்களை நினைவுகூரும்போது பிரபல ஜேம்ஸ் பாண்ட் நட்சத்திரம், உயர்ரகத் தொழில் நுட்பச் சாதனங்கள் போன்ற அம்சங்கள் உடனே கண்முன் வரும்.
அதனை உத்திபூர்வமாகப் பயன்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
வாகனத்தில் செல்லும்போது பாட்டு கேட்டுக்கொண்டே செல்வது வழக்கம்.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வாகனங்களில் தகவல் பொழுதுபோக்கு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
CarPlay Ultra மூலம் கையடக்கத் தொலைபேசி வாகனத் திரையுடன் இணைக்கப்படுகிறது.
What'sApp, Spotify, Google Maps போன்ற செயலிகளை எளிதாகப் பயன்படுத்தலாம்.
புதுத்தொழில்நுட்பத்துக்கு ஆஸ்டன் மார்டின் வாகனங்கள் மிகப் பொருத்தமானவை என்று கூறுகிறார் கார் சஞ்சிகையின் மின்னிலக்கப் பிரிவு இயக்குநர் டிம் போலார்ட்.
அடுத்தடுத்து வெளியீடு காணவிருக்கும் ஆஸ்டன் மார்டினின் புதிய ரக வாகனங்களில் இந்தத் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும்.
புதிய வாகனத்தை வாங்கும்போது எரிபொருள் சிக்கனம் முக்கியம் என்றாலும் தற்போது நவீனத் தொழில்நுட்பமும் முன்னுரிமை பெறுகிறது.

ஆதாரம் : AP