Skip to main content
தொட்டால் மலரும்... ஆப்பிள் மடிக்கணினி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

தொட்டால் மலரும்... ஆப்பிள் மடிக்கணினி

வாசிப்புநேரம் -
தொட்டால் மலரும்... ஆப்பிள் மடிக்கணினி

(படம்: REUTERS/Evelyn Hockstein)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆப்பிள் நிறுவனம் முதன்முறையாகத் தொடுதிரை வசதியுடன் MacBook மடிக்கணினிகளை அறிமுகம்செய்துள்ளது.

தொட்டுப் பழகி வேலை செய்யும் மடிக்கணினியை நெடுங்காலம் அறிமுகம் செய்யாமல் தவிர்த்து வந்தது ஆப்பிள் நிறுவனம்.

அதன் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை தொடுதிரை MacBook உணர்த்துகிறது.

ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டெர்னஸ் (John Ternus) லாஸ் ஏஞ்சலிஸில் புதிய MacBook Pro மடிக் கணினிகளை அறிமுகப்படுத்தினார்.

பிரகாசமான நுண்தெளிவு OLED திரை பயன்படுத்துவோரைக் கவர்ந்திழுக்கலாம்.

iPhone அல்லது iPad கருவிகளைப் போலவே புதிய MacBook Pro மடிக் கணினிகளையும் தொட்டுத் தொட்டு நேரடியாகப் பயன்படுத்தலாம்.

புதிய MacBook Pro தொடுதிரை மடிக்கணினியின் தொடக்க விலை 2,900 டாலர்.

முன்பதிவு தொடங்கிவிட்டது.

ஆப்பிள் விரும்பிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ஆம் தேதியிலிருந்து MacBook Pro மடிக்கணினிகளைப் பெறலாம்.

வடிவமைப்பாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், படைப்புலக நிபுணர்கள் ஆகியோரை MacBook Pro சுண்டியிழுக்கலாம்.

விலை அதிகம் என்பதால் வாடிக்கையாளர்களைப் பரவலாக ஈர்க்குமா என்பது சந்தேகம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்