200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த காகிதக் குறிப்பு...
வாசிப்புநேரம் -
பிரான்ஸின் வடபகுதியில் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் மாணவத் தொண்டூழியர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது.
அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
மண்பானையில் சிறிய கண்ணாடிப் புட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அத்தகைய கண்ணாடிப் புட்டிகளை முன்பு பெண்கள் தங்களது கழுத்துகளில் அணிவார்கள் என்று தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
புட்டிக்குள் காகிதக் குறிப்பு ஒன்று இருந்தது. அது சுருட்டப்பட்டு கயிற்றால் கட்டப்பட்டிருந்ததாக BBC தெரிவித்தது.
"1825ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் P.J Féret இங்கு தொல்லியல் ஆய்வுகளை நடத்தினார். Cité de Limes அல்லது Caesar’s Camp என்று அழைக்கப்படும் இடத்தில் அவர் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்" என்று குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.
Féret 200 ஆண்டுகளுக்கு முன்பு அவ்விடத்தில் முதன்முறையாக ஆய்வுகளை நடத்தியதை உள்ளூர்த் தரவுகள் உறுதிசெய்தன.
இதற்குமுன்னர் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்தும், அதை உறுதிசெய்யும் குறிப்பைக் கண்டுபிடித்தது மறக்கமுடியாத தருணமாக இருந்தது என்று குழுத் தலைவர் கூறினார்.
தொல்லியல் துறையில் ஒருவர் ஆய்வு நடத்திய பிறகு மற்றவர்கள் அங்கு வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் அத்தகைய குறிப்புகளைக் கண்டுபிடிப்பது அரிது என்று சொன்னார் அவர்.

ஆதாரம் : Others/BBC