சிங்க நடனம்... ஆனால் இயந்திர நாய்களுடன்
வாசிப்புநேரம் -

(படம்: 8 Days)
சிங்க நடனம் என்றால் வழக்கமாய்க் குழுவாகச் சிலர் சிங்க ஆடைக்குள் இருந்துகொண்டு் ஆடுவார்கள்...சாகசம் செய்வார்கள்..
சீனாவில் அண்மையில் சில இயந்திரங்கள் ஆடின.
ஷென்ஸென் (Shenzhen) நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குட்டிச் சிங்க ஆடைகளை அணிந்த நிறைய இயந்திர நாய்கள் இடம்பெற்றன.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில்
அவை இசைக்கு ஏற்றவாறு ஒன்றாக அமர்வதையும்... துள்ளிக் குதிப்பதையும்... ஓடுவதையும் காணமுடிகிறது.
'cyber lion dance' என்ற அந்த நடனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுடபத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாரம்பரியமான சிங்க நடனம் இப்படியெல்லாம் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லப்படும் என்று முன்னோர் நினைத்திருக்கமாட்டார்கள் என்று இணையவாசிகள் வேடிக்கையாகக் கூறினர்.
சீனாவில் மற்ற சில கொண்டாட்டங்களிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
நாட்டின் தேசிய அரும்பொருளகத்தில் இயந்திர மனிதக் கருவிகளுடன் பாரம்பரிய நடனம் படைக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவால் நடனமணிகளுக்கும் வேலை இல்லை என்று இணையவாசிகள் சிலர் புலம்பினர்.

ஆதாரம் : 8 Days