இயற்கையான இனிப்புப் பொருள்கள் - உடலுக்கு ஆரோக்கியமானவையா?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சர்க்கரையைக் கட்டுப்படுத்த பலர் இயற்கையான இனிப்புப் பொருள்களை நாடுகின்றனர்.
தேன், மேப்பிள் செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு (maple syrup), அகாவே (agave) ஆகியவற்றை மக்கள் சமையலில் பயன்படுத்துகின்றனர். அவை பிரபலமடைந்திருப்பதால் தற்போது ஊட்டச்சத்துப் பொருள்களை விற்கும் கடைகளில் இயற்கை இனிப்புப் பொருள்கள் வகை வகையாகக் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் உண்மையில் அவை நம் உடலுக்கு நல்லதா?
அதைக் குறித்து New York Times ஊடகம் மருத்துவர்களிடம் விசாரித்தது.
இயற்கையான இனிப்புப் பொருள்களை அளவோடு சாப்பிடாவிட்டால் உடல்நலன் பாதிப்படையக் கூடும் என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் கிம்பர் ஸ்டான்ஹோப் (Kimber Stanhope) ஊடகத்திடம் கூறினார்.
மேலும், சர்க்கரை அல்லது இயற்கை இனிப்புப் பொருள் செரிமானம் ஆகும்போது இரண்டுக்கும் வேறுபாடுகள் இருக்காது என்று டாக்டர் கேரன் டெல்லா கோர்டே (Karen Della Corte) சொன்னார்.
2015-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தேனையும் சர்க்கரையையும் உட்கொண்டவர்களின் உடல்களை ஆராய்ந்து பார்த்தபோது இரு குழுக்களுக்கும் இடையே வித்தியாசங்கள் கண்டறியப்படவில்லை.
இனிப்புப் பண்டம் சாப்பிட விரும்பினால் சர்க்கரை, தேன் போன்ற இனிப்புப் பொருள்கள் கலந்தவற்றைத் தவிர்த்து, பழங்களையும் இனிப்பான காய்கறிகளையும் சாப்பிடுவது சிறந்தது.

ஆதாரம் : Others