Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

Disney கதாபாத்திரங்களைப் புதிய கோணத்தில் படைக்கும் அமெரிக்க ஓவியர்

வாசிப்புநேரம் -
Disney கேலிச்சித்திரங்கள் பெரும்பாலும் சுபமான முடிவுடன் நிறைவடைவதுதான்
வழக்கம். ஆனால் நம் அன்றாட வாழ்க்கையோ அதற்கு நேர்மாறாகப் பல சவால்களும் சங்கடங்களும் நிறைந்ததாக இருப்பது இயல்பே.

அதனை ஓவியத்தின் வாயிலாக உணர்த்துகிறார் அமெரிக்க ஓவியர் ஜெவ் ஹாங் (Jeff Hong). அவர் Disney கதாபாத்திரங்களை உண்மையான உலகச் சூழல்களில் இடம்பெறுவதுபோல் பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். அவை வரும் டிசம்பர் 1ஆம் தேதி வரை கரையோரப் பூந்தோட்டத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

"நம் உலகில் உள்ள தூய்மைக்கேடு, பருவநிலை மாற்றம், இனவாதம் போன்றவற்றை Disney கதாபாத்திரங்ளும் உணர்வதுபோலச் சித்தரிப்பது அந்தப் பிரச்சினைகளை நாம் மேலும் உணர்வுபூர்வமாக அணுக உதவும்," என்றார் ஹாங்.

நமது செயல்கள் சுற்றுப்புறத்தையும் சக மனிதர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த தமது அக்கறையை ஓவியங்களின்வழி வெளிப்படுத்த விழைவதாகவும் அவர் சொன்னார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்