Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புரிந்துணர்வு... கொட்டாவி வருவதற்கான காரணங்களில் ஒன்று என்று உங்களுக்குத் தெரியுமா?

வாசிப்புநேரம் -

பிறர் கொட்டாவி விடுவதைக் காணும்போது...

மேடுகளில், ஆகாயத்தில் பயணம் செய்யும்போது...

கொட்டாவி வருகிறதா...

ஏன் கொட்டாவி வருகிறது என்று 'செய்தி'இடம் சிலர் கேட்டீர்கள்... அதற்கான பதிலைத் திரட்டினோம்...

 

🥱கொட்டாவி விடுவது...

அறிவியல் அடிப்படையில் கொட்டாவி விடுவதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

மூளைக்குப் போதிய அளவில் உயிர்வாயு கிடைக்காததால் ஒருவர் கொட்டாவி விடுவதாகச் சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கொட்டாவி விடக் காரணம்?

🥱பயணத்தில் உயரத்துக்குச் செல்வது அல்லது உயரத்திலிருந்து இறங்குவது

ஒருவர் மேற்கொள்ளும் பயணத்தில் செல்லும் பாதையின் உயரத்தில் ஏற்றம் அல்லது இறக்கம் ஏற்படும்போது கொட்டாவி வரக்கூடும். உதாரணத்துக்கு விமானப் பயணம் மேற்கொள்ளும்போது விமானம் உயரச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் சிலருக்குக் கொட்டாவி வரலாம்.

காதில் இருக்கும் அழுத்தம் மாறுவதால் இயற்கையாகவே கொட்டாவி விடத் தோன்றும்.

🥱புரிந்துணர்வு

கொட்டாவி விடுவதைப் பற்றி வாசிக்கும்போதோ, பிறர் கொட்டாவி விடுவதைக் காணும்போதோ பலருக்குக் கொட்டாவி விடத் தோன்றும்.

சமூகப் புரிந்துணர்வு அதிகமுள்ளவர்களுக்கு அத்தகைய உணர்ச்சி தோன்றும் சாத்தியம் அதிகம்.

ஒருவருடன் நெருக்கமானவர் கொட்டாவி விட்டால் அவரும் கொட்டாவி விடக்கூடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

🥱விழிப்பு தேவை

களைப்பு, சலிப்பு... இவை மூல காரணமல்ல. அந்நிலையில் மூளைக்கு விழிப்பு தேவைப்படுவதால் ஒருவர் கொட்டாவி விடுகிறார்.

🥱அதிகமாகக் கொட்டாவி விடுவது கவலைக்குரியதா?

அளவுக்கு அதிகமாகக் கொட்டாவி விடும்போது சிலரிடையே கவலை எழக்கூடும்.

தூக்கப்பற்றாக்குறையால் அந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.

🥱குறைந்த நடவடிக்கை நிலை - Low active state

இந்நிலையில் இருக்கும்போது கொட்டாவி வருவது சாத்தியம். உதாரணத்துக்குத் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி பார்ப்பது, பள்ளியில் பாடவேளையில் நீண்ட நேரம் ஆசிரியர் சொல்வதைக் கேட்பது, கார் ஓட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கொட்டாவி வரும் சாத்தியம் அதிகம்.

இத்தகைய நடவடிக்கைகளில் உடலில் பெரிய அளவிலான அசைவுகள் இல்லாததால் உடல் low active state எனப்படும் குறைந்த நடவடிக்கை நிலையை அடைகிறது. இந்நிலையில் கொட்டாவி விடும் உணர்ச்சி தூண்டப்படும்.

🥱எப்போது கொட்டாவி விடுவது குறித்து கவனம் செலுத்தவேண்டும்?

சில வேளைகளில் கடுமையான நோய் காரணமாகவும் அடிக்கடி கொட்டாவி வரக்கூடும்...

மாரடைப்பு
இதயத்தில் ரத்தக் கசிவு
மூளைக்கட்டி

🥱விடாமல் கொட்டாவி விடுவது... எதைக் குறிக்கிறது?

உடலிலுள்ள ரத்தவோட்ட அமைப்பு சரிவர இயங்கவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்...

அளவுக்கதிகமாக கொட்டாவி விடுவது குறித்துக் கவலை எழுந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.

ஆதாரம்: International Journal of Applied & Basic Medical Research
ஆசிரியர்: டாக்டர் ஷரத் குப்தா,
அரசாங்க மருத்துவக் கல்லூரி,
பட்டியாலா, பஞ்சாப், இந்தியா

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்