Asparagus - ஆரோக்கியமானதா?
(படம்: Envato Elements)
This audio is generated by an AI tool.
Asparagus என்பது ஒரு காய்கறி.
அது உடலுக்கு ஆரோக்கியமானதா?
அதிலுள்ள ஊட்டச்சத்துகள் என்னென்ன?
Prebiotics நிறைந்தது
➣ Inulin எனப்படும் Prebiotics நார்ச்சத்து Asparagus-இல் நிறைந்துள்ளது
➣ அதை செரிக்கவைப்பது சிரமம்
➣ அதனால் Inulin செரிக்காமல் குடலுக்குள் செல்லும்
➣ குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரியைப் பேண Inulin உதவும்.. குடலில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கும்
கண்பார்வை பாதுகாக்கப்படலாம்
➣ Lutein, Zeaxanthin ஆகிய ஆன்டிஆக்சிடன்ட் (Antioxidants) பொருள்கள் Asparagus-இல் உள்ளன.
➣ நமக்கு முன்னால் இருக்கும் பொருளைத் தெளிவாகப் பார்க்கவும் நிறங்களைச் சரியாகப் பார்க்கவும் அவை கைகொடுக்கின்றன.
வைட்டமின் K உள்ளது
➣ 6 துண்டு Asparagus-இல் சுமார் 40 மைக்ரோகிராம் வைட்டமின் K உள்ளது
➣ ஒவ்வொரு நாளும் 90லிருந்து 120 மைக்ரோகிராம் வரை சாப்பிடலாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை
➣ சில நேரங்களில் நமக்கே தெரியாமல் தோலில் கிழித்துக்கொள்ளும்போது ரத்தத்தை நிறுத்த சில புரதங்கள் உதவும்.
➣ அந்தப் புரதங்கள் சரியாக வேலை செய்ய வைட்டமின் K தேவை