Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமூக ஊடக நட்சத்திரமான கிங் பெங்குவின்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் மீன் காட்சியகத்தில் உள்ள பெஸ்தோ (Pesto) எனும் கிங் பெங்குவின் சமூக ஊடகத்தில் பிரபலமாகிவருகிறது.

அதைக் காண மக்கள் Sea Life Melbourne மீன் காட்சியகத்தில் திரள்கின்றனர்.

9 மாதத்தில் 22 கிலோகிராம் எடை கொண்டுள்ளது பெஸ்தோ.

இதுவரை மீன் காட்சியகத்தில் இருந்த ஆக அதிக எடைகொண்ட குட்டிப் பெங்குவின் அது என்று மேற்பார்வையாளர் ஒருவர் கூறினார்.

பெஸ்தோவின் வளர்ப்புப் பெற்றோரின் மொத்த எடைதான் அதன் எடை.

அதன் வளர்ப்புப் பெற்றோர் ஒவ்வொன்றும்11 கிலோகிராம் எடை கொண்டவை.

உலகெங்கும் 1.9 பில்லியனுக்கும் அதிகமானோர் சமூக ஊடகம் வழி பெஸ்தோவைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்