Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

உங்களுக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பரிவர்த்தனை ஆனதா?

வாசிப்புநேரம் -

தெரியாமலேயே வங்கிக் கணக்கில் பணம் பரிவர்த்தனையான சம்பவம் நம்மில் சிலருக்கு நடந்திருக்கலாம்.

அதற்குப் பெயர் தானியக்கக் கடன் அட்டை மோசடி (Automatic debit scams).

மோசடிக்காரர்களிடம் கடன் அட்டைக்கான விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவில்லை..

பிறகு எப்படி அவர்களுக்கு அந்த விவரங்கள் கிடைத்தன?

இணையப் பாதுகாப்பு நிபுணர் கணேஷ் நாராயணன் அந்த விவரங்களைச் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார்.

📱 பாதுகாப்பற்ற இணையத்தளங்களில் பொருள்களை வாங்க கடன் அட்டை விவரங்களைத் தெரிவிக்கும்போது தரவுத் திருட்டு மூலம் மோசடிக்காரர்கள் அந்த விவரங்களைப் பெற முடியும்.

📱 செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது அது முறையான செயலி இல்லை என்றால் நச்சுநிரலும் கருவியில் பதிவிறக்கம் செய்யப்படும். அந்த நச்சுநிரல் பயனீட்டாளரின் தொலைபேசியிலோ கணினியிலோ இருக்கும் விவரங்களை மோசடிக்காரர்களுக்கு அனுப்பும்.

📱 சமூக ஊடகங்களில் பயனீட்டாளர்கள் அறியாமல் தங்களுடைய விவரங்களைப் பகிரும்போது மோசடிக்காரர்களால் அந்த விவரங்களைப் பெற முடியும்.

📱 பொது Wifi கட்டமைப்பைப் பயன்படுத்தி மின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தும்போது மோசடிக்காரர்களால் வங்கி விவரங்களைப் பெற முடியும்.

(கோப்புப் படம்: AFP/Roslan RAHMAN)
பணத்தைத் திரும்ப பெற முடியுமா?

💸 நடந்த பரிவர்த்தனை உங்களுடைய அனுமதியின்றி நடந்திருந்தால் அதைப் பற்றி புகார்செய்ய வேண்டுமென DBS வங்கி அதனுடைய இணையப்பக்கத்தில் தெரிவித்தது.

💸 பரிவர்த்தனையை நன்கு விசாரித்தபின் வங்கி அந்தத் தொகையை மீண்டும் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

எப்படி கவனமாக இருப்பது?

❓ அடிக்கடி வங்கிக் கணக்கைச் சோதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் மோசடிப் பரிவர்த்தனைகள் நடப்பது தெரியாமல் போகலாம்.

❓ மின் வங்கிச் செயலியில் பரிவர்த்தனை பற்றிய விவரங்களைப் பெற குறுஞ்செய்தி பெறும் தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம். ஆகக் குறைவான தொகையாக 0.01 காசு எனும் வரம்பைத் தெரிவுசெய்யலாம். எனவே ஒரு காசு வங்கியிலிருந்து பரிவர்த்தனையானாலும்கூட அது பயனீட்டாளருக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
ஆதாரம் : Mediacorp Seithi/Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்