Skip to main content
உடலை மறைக்காத ஆடையா? பொட்டல உறையா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

உடலை மறைக்காத ஆடையா? பொட்டல உறையா?

வாசிப்புநேரம் -
பொட்டலத்தைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறைகளைப் பார்த்திருப்போம்...

ஆடையாக அணியக்கூடிய பிளாஸ்டிக் உறையைப் பார்த்திருக்கிறீர்களா?

பெலரூஸில் (Belarus) உள்ள ZNWR எனும் ஆடை நிறுவனம் உறையைப் போல் தோன்றும் ஆடையை வெளியிட்டுள்ளது.

ஒளி ஊடுருவக்கூடிய அந்த ஆடை உடலை மறைக்காது...

ஆடை முழுதும் பல்வேறு குமிழிகள் இருப்பதைப் போன்று தோன்றும்..

அது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளதால் ஆடையை சூடான வானிலையில் அணிவது நல்லதல்ல என்று நிறுவனம் கூறுகிறது.

ZNWR அத்தகைய 20 ஆடைகளை மட்டுமே வெளியிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆடையும் 280 பெலரூஸ் ரூபள்ஸுக்கு (116 வெள்ளி) விலை போகிறது.

சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆடையின் படங்கள் இணையவாசிகள் பலரை ஈர்த்தன.

'கூட்டம் நிறைந்த பேருந்தில் இதை நிச்சயமாக அணியமுடியாது..'

'இந்த ஆடையை வாங்கினால் குமிழிகளை வெடிக்கச் செய்வதில் மகிழ்ச்சி ஏற்படும்' என்று சிலர் வேடிக்கையாகக் கூறினர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்