Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

"இறக்கும்வரை போராடுவதை நிறுத்தவில்லை" - TikTok பிரபலம் அரிய வகை நோயால் அவதிப்பட்டுக் காலமானார்

வாசிப்புநேரம் -
"இறக்கும்வரை போராடுவதை நிறுத்தவில்லை" - TikTok பிரபலம் அரிய வகை நோயால் அவதிப்பட்டுக் காலமானார்

BEANDRI, OUR INSPIRATION/Facebook

 தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த TikTok பிரபலம் பீண்ட்ரி பூசென் (Beandri Booysen) progeria எனும் அரிய வகை நோயால் அவதிப்பட்டுக் காலமானார்.

அவருக்கு வயது 19. 

நோய் காரணமாக பீண்ட்ரிக்கு 
வேகமாக வயதானது. 

வாழ்க்கையின் ஒவ்வோர் ஆண்டிலும் அவருக்கு எட்டு வயது கூடியது.  

பீண்ட்ரியின் மறைவு குறித்து அவரது தாயார் Facebookஇல் பதிவிட்டிருந்தார். 

"தென்னாப்பிரிக்காவில் பலரும் விரும்பிய இளம் பெண்களில் பீண்ட்ரியும் ஒருவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவர் progeria குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தூண்டுகோலாக இருந்திருக்கிறார். உலகில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் கொடுத்தார். இறக்கும்வரை பீண்ட்ரி போராடுவதை நிறுத்தவில்லை," என்று அவரது தாயார் பதிவில் குறிப்பிட்டார். 

ஆதாரம் : Others/Social Media

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்