Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

1969ஆம் ஆண்டு காணாமல்போன Beatles கிட்டார்... தேடும் முயற்சியில் 3 ரசிகர்கள்

வாசிப்புநேரம் -
Beatles என்ற பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர் பால் மெக்கார்ட்னிக்குச் (Paul McCartney) சொந்தமான கிட்டாரைத் தேடும் பணியில் மூவர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

கிட்டார் நிபுணர் நிக் வாஸ் (Nick Wass), செய்தியாளர் ஸ்காட் ஜோன்ஸ் (Scott Jones), அவரின் மனைவி நியோமி ஜோன்ஸ் (Naomi Jones) ஆகிய 3 Beatles ரசிகர்களும் அதுவே rock and roll இசையின் ஆகப்பெரிய மர்மம் என்கின்றனர்.

மெக்கார்ட்னியின் அந்த Höfner bass கிட்டார் கடைசியாக 1969ஆம் ஆண்டு லண்டன் நகரில் காணப்பட்டது.

அதன் பின்னர் அது மர்மமாக எந்தவொரு தடயமுமின்றி மறைந்துவிட்டது.

அந்தக் கிட்டாரை மெக்கார்ட்னி 1961ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் சுமார் 30 பவுண்டுக்கு வாங்கினார்.

அது குறித்த தகவல்களுக்காக மூவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது வெறும் தேடலே என்றும் விசாரணை இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

-AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்