Skip to main content
பிளாஸ்டிக்கால் உருவான படுக்கை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிளாஸ்டிக்கால் உருவான படுக்கை

வாசிப்புநேரம் -

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான படுக்கைகள் தூக்கிவீசப்படுகின்றன.

இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகக் கவலையளிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

அதற்குத் தீர்வு கண்டுள்ளது மெல்பர்னைச் (Melbourne) சேர்ந்த நிறுவனமொன்று;
ஓர் அற்புதமான கண்டுபிடிப்பை அது உருவாக்கியுள்ளது.

முழுக்கமுழுக்க பிளாஸ்டிக்கால் உருவான படுக்கைகளை அது வடிவமைத்துள்ளது.

மனிதர்கள் தூங்கும் முறையையும் இது மாற்றியமைக்கும் என்று நம்பப்படுகிறது.

லெகொவைப் (Lego) போன்று இருக்கும் அதனை மிக எளிதாக உருவாக்கலாம்.

King single படுக்கையை உருவாக்கக் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பிடிக்கும் என்று கூறுகிறார் இதனை வடிவமைத்தவர். 

இது ஆஸ்திரேலியாவின் முதல் கண்டுபிடிப்பாகும்.

உலகம் முழுவதும் விரிவாக்கம் காணவும் திட்டமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.8 மில்லியன் மெத்தைகள், நூறாயிரக்கணக்கான படுக்கைகள் தூக்கியெறிப்படுகின்றன.

இதுபோன்ற முற்றிலும் பிளாஸ்டிக்கால் செய்யப்படும் படுக்கைப் பாகங்கள், குப்பைக் கிடங்கில் போடப்படும்போது  
அந்த நிலை மாறும் என்று நம்பப்படுகிறது.

படுக்கைகள் குறைந்தபட்சம் 140 கிலோ எடையைத் தாங்கக்கூடியவை;

மற்ற படுக்கைகள் போன்றே இவற்றை  நீண்டநாள் பயன்படுத்தலாம்.

எப்படியும் இவை பத்தாண்டுகள் தாக்குப்பிடிக்கும்.

ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்