ஹோட்டலில் பொம்மைகளுக்குத் தனி மெத்தை - எங்கே?
Unsplash/Sean P
This audio is generated by an AI tool.
ஜப்பானில் உள்ள ஹோட்டலில் பொம்மைகளுக்குச் சிறிய மெத்தைகளும் ஆடைகளும் வழங்கப்படுகின்றன.
சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் கூடுதலாக 300 யென் (சுமார் 3 வெள்ளி) செலுத்தவேண்டும்.
ஜப்பானில் பல இளையர்கள் தங்களது பொம்மைகளைக் கவனமாக அலங்கரித்து அவற்றுடன் பயணம் செய்கின்றனர்.
கேலிச்சித்திரங்களில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் பலரையும் ஈர்க்கின்றன என்று South China Morning Post குறிப்பிட்டது.
பொம்மைகளுடன் பயணம் மேற்கொண்டால் 'நிபந்தனையற்ற தோழமையை' உணரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹோட்டலின் புதிய முயற்சி Z தலைமுறையினரை ஈர்க்கும் என்று நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.
பரவலான வரவேற்பையடுத்து பல்வேறு கிளைகளில் சேவை வழங்கப்படவுள்ளது.
பல இணைவாசிகள் அதற்கு ஆதரவளித்து தங்களது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.