நோயாளிகளுக்குத் தரமான உணவை வழங்கியதற்காகப் பாராட்டப்பட்ட பெல்ஜிய மருத்துவமனை
வாசிப்புநேரம் -

(படம்:freepik)
மருத்துவமனை உணவு என்றாலே அது பொதுவாகப் பள்ளி மதிய உணவுக்கு ஈடாகப் பட்டியலிடப்படும்.
ஆனால் மேற்கு பெல்ஜியத்தில் உள்ள ஒரு மருத்துவமனை அந்த நிலையை மாற்றியிருக்கிறது.
அந்த மருத்துவமனையின் உணவைப் பிரபல பிரெஞ்சு உணவக வழிகாட்டிமுறை அங்கீகரித்துள்ளது.
மருத்துவமனையின் பெயர் AZ Groeninge. அது தனது நோயாளிகளுக்கு வழங்கும் உணவின் தரத்தை Gault & Millau எனும் அந்த பிரெஞ்சு உணவக வழிகாட்டிமுறை பாராட்டியிருக்கிறது.
மருத்துவமனையில் வழங்கப்படும் உணவுகள் சிலவற்றைச் சொந்த வீட்டில் சமைத்துப் பரிமாறும் அளவுக்கு அற்புதமான சுவையுடனும் தரத்துடன் இருப்பதாக Gault & Millau தலைமை நிர்வாகி மார்க் டேகிளார்க் (Marc Declerck) வருணித்துள்ளார்.
மீன் வகைகள், உருளைக்கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு அதிலடங்கும்.
"உணவு ஆடம்பரமாக இருக்கவேண்டியதில்லை. ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருந்தால்போதும். நீங்கள் எப்படிப்பட்ட உணவைச் சாப்பிட விரும்புகிறீர்களோ அதையே மற்றவர்களுக்கும் செய்துகொடுங்கள்" என டேகிளார்க் Reuters-இடம் சொன்னார்.
மருத்துவனையில் தயார்செய்யப்படும் உணவு Gault & Millau உணவக வழிகாட்டிமுறையில் இடம்பெறாது. ஆனால் அந்த உணவு Gault & Millau-இன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.