Skip to main content
ஓட்ஸ்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஓட்ஸ் - இவ்வளவு நன்மைகளா?

வாசிப்புநேரம் -
ஓட்ஸ் - இவ்வளவு நன்மைகளா?
வெளியீடு : 20 May 2026 08:30AM புதுப்பிப்பு : 20 May 2026 09:20AM
ஓட்ஸ்… நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உண்ணப்பட்டு வரும் ஓர் எளிமையான காலை உணவு. மலிவான உணவும்கூட.

இதில் புரதச்சத்து அதிகம், கொழுப்புச்சத்து குறைவு. பல்வேறு ஊட்டச்சத்துகளும் கனிமச்சத்துகளும் உள்ளன.

ஆனால் அதன் சிறப்பு அத்துடன் நின்றுவிடாது! ஓட்ஸ் அதிக நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதயத்தைப் பாதுகாக்கிறது ஓட்ஸ்

ஓட்ஸை தினமும் உட்கொள்வது நம் உடலிலுள்ள LDL எனும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் குறைகிறது.

குறிப்பாக அதிக ரத்தக் கொழுப்பால் அவதிப்படுபவர்கள் ஓட்ஸை உண்ணும்போது கணிசமான மாற்றங்களைக் காணமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும்

மாவுச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு அதிவேகமாக உயர்கிறது.

ஆனால் ஓட்ஸ் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவின் உயர்வு மெதுவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக வகை 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஓட்ஸ் மிக ஆரோக்கியமான உணவு. நோய் ஏற்படுவதைத் தடுக்கவும் ஓட்ஸ் உதவுகிறது.

2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஓட்ஸை அதிகம் உண்ணுவோருக்கு (வாரத்தில் 2 முறையாவது) வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 21 விழுக்காடு குறைவதாகத் தெரியவந்தது.

குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

பாதி குவளை ஓட்ஸில் சுமார் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. பெரியவர்கள் தங்கள் வயது, பாலினம் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல் தினமும் 21 முதல் 38 கிராம் வரை நார்ச்சத்தை உண்ணவேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஓட்ஸில் உள்ள பெட்டா-குளுக்கன் (beta-glucan) நார்ச்சத்து சிறுகுடலில் ஒழுங்காகச் செரிமானமாகாததால் அது பெருங்குடலுக்குச் செல்கிறது.

பெருங்குடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் கிடைக்கின்றன.

குடல் படலம் வலுப்பெறுகிறது, வீக்கமும் குறைகிறது.

ஓட்ஸை சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான வழி எது?

ஓட்ஸ் குருணை (Groats) என்பது ஓட்ஸின் மிகக் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட வடிவமாகும், துரித ஓட்ஸ் (Instant Oats) ஆக அதிக அளவு பதப்படுத்தப்பட்டது.

இவற்றுக்கிடையில் ஸ்டீல்-கட் (Steel-cut) ஓட்ஸ், ஆவியில் வேகவைத்து, தட்டையாக்கப்பட்ட ஓட்ஸூம் உண்டு.

இவை அனைத்தும் நல்ல தெரிவுகள்தான், ஆனால் ஆகக் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட ஓட்ஸை உண்பதே மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது.

துரித ஓட்ஸில் கலக்கப்பட்டுள்ள சீனி அதன் நன்மைகளைக் குறைக்கலாம்.

எனவே பழங்கள், கடலைகள், பட்டைத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது நல்லது என்பது நிபுணர்களின் கருத்து.
ஆதாரம் : New York Times

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்