Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'Best before' காலாவதித் தேதியால் வீணாகும் உணவுகள் - அவசியம் தேவையா?

வாசிப்புநேரம் -

உலகத்தில் உணவை வீணாக்குவது குறித்த கவலை அதிகரித்துவரும் நிலையில், உணவுப்பொருள்களில் "best before" எனும் காலாவதித் தேதி குறிப்பிடப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது. 

பொருள்களின் தரத்தை நிர்ணயிக்க உற்பத்தியாளர்கள் 'best before' முத்திரைகளைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

விரைவில் கெட்டுப்போகக்கூடிய இறைச்சி, பால் சார்ந்த உணவுப்பொருள்களுக்குப் பயன்படுத்தப்படும் 'use by' எனும் முத்திரையை காட்டிலும் இந்த 'best before' முத்திரை மாறுபட்டிருக்கிறது.

'Best before' முத்திரைக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் தொடர்பில்லை என்று கருதப்படுகிறது. 

ஆனாலும் உண்பதற்குப் பாதுகாப்பாக இருக்கும் சில உணவுப்பொருள்களைப் பயனீட்டாளர்கள் தூக்கியெறிய அந்த முத்திரைகள் காரணமாகிவிடுகின்றன. 

"முத்திரையில் உள்ள தேதியைப் பார்த்துவிட்டு, சம்பந்தப்பட்ட உணவை உண்பது ஆபத்தானது என நினைத்து அதனை வீசுகிறார்கள். ஆனால், குறித்த காலாவதித் தேதிக்குப் பின் அந்த உணவை உண்ணக் கூடாது, அதில் சத்து அல்லது சுவை இருக்காது என அர்த்தமில்லை" 

எனக் கலிபோர்னியா (California) ஆலமீடாவிலுள்ள (Alameda) Food Shift நிறுவனத்தின் மேலாளர் பேட்டி ஆப்பிள் (Patty Apple) சொல்கிறார். 

லாப நோக்கமில்லாத அந்த நிறுவனம் காலாவதியான அல்லது வடிவத்தில் கோளாறு உள்ள உணவுப்பொருள்களைத் திரட்டி அவற்றை மறுபயனீடு செய்கிறது. 

இப்பிரச்சினையைக் கையாள, அண்மையில் பிரிட்டனின் மிகப் பெரிய நிறுவனங்களான Waitrose, Sainsbury’s, Marks & Spencer ஆகியவை முன்கூட்டியே பொட்டலமிடப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இருந்து 'Best before' முத்திரையை நீக்கின. 

இந்த ஆண்டு இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றியம் 'Best before' காலாவதித் தேதியைக் குறிப்பிடுவதை ஒட்டுமொத்தமாக நீக்குவது குறித்துப் பரிசீலிக்கிறது. 

ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்