Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமையலுக்கு உகந்த எண்ணெய் எது?

வாசிப்புநேரம் -

எண்ணெய்களில் பல வகை உண்டு.

அவற்றில் சமையலுக்கு உகந்த, உடலுக்கு ஆரோக்கியமான எண்ணெய் எது?

அது என்ன சமைக்கிறோம் என்பதைப் பொறுத்துள்ளது.

எண்ணெயைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் புகை நிலையைக் (smoke point) கருத்தில்கொள்ள வேண்டும்  என்கிறது Times செய்தி நிறுவனம்.

எண்ணெய் அதன் புகைநிலையைக் கடந்தால், அதன் ஊட்டச்சத்துப் பாதிப்படைவதோடு எண்ணெயின் சுவையும் குறைகிறது.

ஆலீவ் எண்ணெய் (Olive oil)

pixabay

ஆலீவ் எண்ணெயில் 'extra virgin' என்று குறிப்பிடப்பட்டுள்ள வகை, சமைப்பதற்கும் உட்கொள்வதற்கும் ஆக ஆரோக்கியமான எண்ணெய்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

அந்த வகை சுத்திகரிக்கப்படாததால், அது உயர் தரமானதாகக் கருதப்படுகிறது.

புகைநிலை: மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது குறைவு.

சமையல்: குறைந்த, நடுத்தர வெப்பங்கொண்ட சமையலுக்குச் சிறந்தது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அதிக அளவு நிறை கொழுப்பு (saturated fat) உண்டு.

அதனால், அதை முற்றிலும் தவிர்ப்பது அல்லது மிதமான அளவு மட்டும் சேர்த்துக்கொள்வது சிறந்தது என்று கூறப்படுகிறது.

புகைநிலை: அதிகம்

சமையல்: அதில் நிறைய நிறை கொழுப்பு உள்ளதால், பொரியல் போன்ற அதிக வெப்பத்தில் செய்யக்கூடிய சமையலுக்கு உகந்தது.

தாவர எண்ணெய் (Vegetable oil)

தாவர எண்ணெயின் ஆரோக்கியம், அது எதைக்கொண்டு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்துள்ளது.

 

சோளம் அல்லது சோயாபீன் (soybean) எண்ணெயைவிட ஆலீவ் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது என்றது Time சஞ்சிகை.

மேலும், தாவர எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டவை.

அதனால், அவற்றின் சுவையும் குறைவு, ஊட்டச்சத்தும் குறைவு.

கடுகு எண்ணெய் (Canola oil)

தாவர எண்ணெய்களிலேயே, கடுகு எண்ணெயில் தான் ஆகக் குறைவான நிறை கொழுப்பு உள்ளது.

புகைநிலை: அதிகம்

சமையல்: அதிக வெப்பத்தில் செய்யக்கூடிய சமையலுக்குப் பயனுள்ளது.

எனினும், 'Cold-pressed' அல்லது சுத்திகரிக்கப்படாத கடுகு எண்ணெயே அதிகப் பயனளிக்கக்கூடியது.

சூரியகாந்தி எண்ணெய் (Sunflower oil)

வைட்டமின் E (vitamin E) அதிகம் உள்ளது.

புகைநிலை: அதிகம்

எனினும், அதில் omega-6 கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், சூரியகாந்தி எண்ணெயை மிதமான அளவு பயன்படுத்துவதே சிறந்தது.

omega-6 அதிக அளவு உட்கொண்டால், உடலில் வீக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

கடலை எண்ணெய் (Peanut oil)

monounsaturated fat எனும் கொழுப்பு அதிகம் உள்ள சமையல் எண்ணெய்களில் கடலை எண்ணெயும் ஒன்று.

நல்ல சுவை, நறுமணம் கொண்டது.

சமையல்: அதிக வெப்பத்தில் செய்யக்கூடிய சமையலுக்கு உகந்தது.

நல்லெண்ணெய் (Sesame oil)

சிறிய அளவு பயன்படுத்தினாலே, நல்ல சுவை கொடுக்கக்கூடியது.

polyunsaturated கொழுப்பும், monounsaturated கொழுப்பும் கொண்டது.

அவை இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் என்று கூறப்படுகிறது.

சமையல்: அதிக வெப்பத்தில் செய்யக்கூடிய சமையலுக்கு உகந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்