Skip to main content
'அருமை'...2022
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

'அருமை'...2022-இன் சிறந்த திரைப்படங்கள் என்று இளையர்கள் கூறுவது?

வாசிப்புநேரம் -
2022ஆம் ஆண்டில் தமிழ்த் திரைப்படங்களுக்குப் பஞ்சமே இல்லை.

இவ்வாண்டு பற்பல திரைப்படங்கள் மக்களைக் கவர்ந்து அவர்களை மகிழ்வித்தன.

இளையர்களுக்கு விருப்பமான திரைப்படங்கள் என்னென்ன? கேட்டறிந்தது 'செய்தி'.


காதல் நகைச்சுவை (Romcom) திரைப்படங்கள்

1. டான் (Don)

இசையமைப்பாளர் அனிருத்தின் அசத்தலான இசை தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி லோகேஸ்வரி.

படத்தின் முதல் பகுதி நகைச்சுவையாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் பெற்றோர் செய்யும் தியாகங்களைத் திரைப்படம் உணர்த்தியதாக அவர் தெரிவித்தார்.

2. லவ் டுடே (Love Today)

Twitter/Pradeep Ranganathan

இளையர்களை அதிகம் கவர்ந்த படங்களில் இந்தத் திரைப்படமும் ஒன்று. இதில் யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகவும் பாராட்டப்பட்டது.

“என்னை விட்டு உயிர் போனாலும்” பாடலை அன்றாடம் குறைந்தது 5 முறை கேட்பதாகக் குறிப்பிட்டார் உயர்நிலை 4 மாணவன் சுதர்ஷன்.

குடும்பத் திரைப்படங்கள்

1. ஓ மை டாக் (Oh My Dog)

நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய், பேரன் அர்னாவ் விஜய் நடித்த நகைச்சுவைத் திரைப்படம்.

கேலிச்சித்திரப் படமான 101 Dalmatians கதையுடன்
தொடர்புபடுத்தி எடுத்தது தமக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் கூறினார் தொடக்கப்பள்ளியில் பயிலும் பிரீத்தீ.

2. விருமன்

Twitter/ Aditi Shankar

கார்த்தி அதிதி சங்கரோடு இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் பலரின் உள்ளங்களில் எதிரொலித்ததாக இளையர்கள் கூறினர்.

பரபரப்பான வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நமக்கு இத்தகைய எளிமையான திரைப்படத்தைப் பார்க்கும்போது மனம் அமைதியடைகிறது என்றார் ரேஷ்மா.

அடிதடித் திரைப்படங்கள்

1. மகான்
Twitter/karthik subbaraj
கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களில் விக்ரமும் அவருடைய மகன் துருவ் விக்ரமும் நடித்த இந்தப் படத்தில் சமூகக் கருத்துகள் நிறைய இடம்பெற்றிருந்ததாகச் சுட்டினார் அவினாஷ்.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்றும் கதாபாத்திரங்கள் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன என்றும் சொன்னார் அவர்.

2. விக்ரம்
Twitter/Kamal Haasan
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மூவரும் இணைந்து நடித்த விறுவிறுப்பான அதிரடித் திரைப்படம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை வேறோர் உலகத்திற்குக் கடத்திச் சென்றார் என்றனர் சில இளையர்கள்.

அனிருத்தின் இசை சண்டைக் காட்சிகளுக்குப் பொருத்தமாக அமைந்தது என்றார் உயர்நிலைப் பள்ளி மாணவர் சஞ்சீவ்.

3. வெந்து தணிந்தது காடு
TWITTER/ GAUTHAM VASUDEV MENON
சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு வேலை தேடிச்செல்லும் ஊழியர்களின் சிரமத்தைப் பகிரும் திரைப்படத்தில் “மல்லிப்பூ” பாடல் மக்களின் மனத்தைக் கவர்ந்ததாகப் பல்கலைக்கழக மாணவி காவியா கூறினார்.

மனத்துக்கு இதமளிக்கும் படங்கள்

1. முதல் நீ முடிவும் நீ
Twitter/Mudhal Nee Mudivum Nee - Official
பதின்ம வயதினர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய திரைப்படம்.

படம் தமக்கு நல்ல பாடங்களைக் கற்பித்ததாகக் கூறினார் தொடக்கக் கல்லூரி மாணவி ஸ்ருதி.

2. திருச்சிற்றம்பலம்
Twitter/Dhanush
தனுஷ், நித்யா மேனனின் இயல்பான நடிப்பும் அனிருத்தின் இசையும் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்தது; அது பள்ளிப் பருவத்தை மீண்டும் நினைவுகூர வைத்தது என்றார் பாலர் பள்ளி ஆசிரியர் மோனிக்கா.

சமூகக் கருத்து கொண்ட படங்கள்

1. சர்தார் 
Twitter/PS Mithran
படம் தண்ணீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சிறுத்தைக்குப் பிறகு மீண்டும் கார்த்தியைக் காவல்துறைச் சீருடையில் கண்டது வித்தியாசமாக இருந்தது என்றார் கீர்த்திகுமார்.

2. கடைசி விவசாயி

விவசாயிகளின் சிரமத்தை எடுத்துரைக்கும் படத்தில் 85 வயதான நல்லாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அது சிறப்பாக இருந்ததாகப் பல்கலைக்கழக மாணவி தீபிகா சுட்டினார்.

3. கார்கி (Gargi)

Twitter

சாய் பல்லவியின் மாறுபட்ட நடிப்பில் திரையைக் கலக்கிய இப்படம், ஒரு பெண்ணின் போராட்டத்தைச் சுற்றி நிகழ்கிறது; சாய் பல்லவியின் நடிப்பு மிகவும் அருமை என்றார் உயர்நிலைப் பள்ளி மாணவி சந்தோஷி. 

வரலாற்றுப் படம்

1. பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan)
Twitter/Ponniyin selvan

 

இயக்குநர் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பைக் கண்ட மக்கள் வியந்துபோயினர். திரைப்படத்தை 10 முறை பார்த்தாலும் சலிக்காது; ஒவ்வொரு காட்சியும் மெய்சிலிர்க்க வைத்தது என்று கூறினார் உயர்நிலைப் பள்ளி மாணவி பிரியா. 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்