Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பில் கேட்ஸுக்கும் ஒருகாலத்தில் Resume இருந்தது...

வாசிப்புநேரம் -

பெருஞ்செல்வந்தர்களில் ஒருவர்...
அவரது பெயரைத் தெரியாமல் இருப்பவர் யாருமில்லை...

பில் கேட்ஸும் ஒருகாலத்தில் வேலைதேடினார்...கையில் Resume எனப்படும் சுயவிவரக் குறிப்புடன்...

66 வயது திரு. கேட்ஸ் 48 ஆண்டுகளுக்குமுன் பயன்படுத்திய தமது சுயவிவரக் குறிப்பை Linkedin-இல் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அப்போது Harvard பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்ந்தவர் அவர்.

இயங்குதளக் கட்டமைப்பு (perating systems structure), தகவல்தள நிர்வாகம் (database management), கணினி வரைகலை (computer graphics) ஆகியவற்றைக் கற்றுக்கொண்டுள்ளதாகத் திரு. கேட்ஸ் சுயவிவரக் குறிப்பில் எழுந்திருந்தார்.

(படம்: Bill Gates / linkedin)

சுயவிவரக் குறிப்பில் தமது முகவரி, உயரம், எடை ஆகிய தனிப்பட்ட விவரங்கள்கூட இடம்பெற்றிருந்தன!

"நீங்கள் அண்மையில் பட்டம் பெற்றவராக இருந்தாலும் சரி... பல்கலையிலிருந்து பாதியில் வெளியேறியவராக இருந்தாலும் சரி...உங்களுடைய சுயவிவரக் குறிப்பு நிச்சயமாக என்னுடையதைவிட சிறப்பாக இருக்கும்!" என்று திரு. கேட்ஸ் பதிவிட்டார்.

வேலை தேடும் பலர் வேலை கிடைக்காமல் மனம் தளரலாம்...குறிப்பாகச் சுயவிவரக் குறிப்பு சிறப்பாக இல்லை என்றும் வருந்தலாம்...

அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திரு. கேட்ஸின் பதிவு அமைந்துள்ளது.

ஆதாரம் : Others/Linkedin

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்