Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பறவைகளின் பாடலால் 90 விழுக்காட்டினரின் மனநலம் மேம்படுகிறது - பிரிட்டிஷ் ஆய்வு

வாசிப்புநேரம் -

பறவைகளைப் பார்ப்பது அல்லது அவை பாடுவதைக் கேட்பதன் வாயிலாக 10இல் 9 பேரின் மனநலம் மேம்படுவதாக ஆய்வு கூறுகிறது. 

பிரிட்டனில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'Big Garden Birdwatch' நிகழ்ச்சியின் மூலம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் பங்கேற்பதால் மனநலத்தை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது;  ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவமுடிகிறது என்று கருதுகின்றனர் மக்கள். 

கடந்த ஆண்டு அந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 700,000 பேர் பங்கேற்றனர். 

11 மில்லியனுக்கும் அதிகமான பறவைகளை அவர்கள் கணக்கிட்டனர்.

தோட்டத்துக்கு அதிகம் வந்துபோன பறவைகளில் ஒன்று சிட்டுக்குருவி. 'Blue tit', 'Starling' ஆகிய பறவைகளும் அதிகம் காணப்பட்டன.

ஆனால் இந்த ஆண்டு மோசமான குளிர் காரணமாகப் பறவைகளைப் பார்க்கும் இந்த நிகழ்ச்சி பாதிக்கப்படலாம் எனப் பறவையியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இதற்கிடையே YouGov கருத்துக்கணிப்பில் பிரிட்டன் இளையர்களிடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள்:

*88% - வெளிப்புறங்களில் இயற்கையுடன் நேரத்தைச் செலவிடுவது முக்கியம். 

*53% - அவ்வாறு செய்வது மிக முக்கியம். 

*91% - பறவைகளைப் பார்ப்பதால்,  அவை பாடுவதைக் கேட்பதால் மனநலனும் உடல்நலனும் மேம்படுகின்றன. 

வனப்பகுதிகள், சதுப்பு நிலங்கள், பிற இயற்கை இடங்களில் நேரத்தைச் செலவிடுவது மனநலத்தை மேம்படுத்த உதவியிருப்பதாக மற்ற பல ஆய்வுகள் வாயிலாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்