Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இத்தகைய கறுப்புப் பிளாஸ்டிக் கரண்டிகளைப் பயன்படுத்துகிறீர்களா? இது உங்களுக்கு…

வாசிப்புநேரம் -

கறுப்புப் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட பொருள்களில் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடிய 'flame retardants' நச்சுத்தன்மையின் அளவு அதிகம் இருக்கலாம் என்கிறது புதிய ஆய்வு.

பிள்ளைகளுக்கான பொம்மைகள், உணவுப் பாத்திரங்கள், கறுப்பு நிறக் கரண்டி உள்ளிட்ட சமையலறைப் பொருள்களில் அந்த ரசாயனம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

குறிப்பு: ஒரு பொருள் எளிதில் எரியாமல் தடுக்க உதவும் ரசாயனம் 'flame retardants' என்று அறியப்படுகிறது.

பயன்படுத்தும் பொருள்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக ஆபத்தான 'flame retardant' ரசாயனம் என்றால் அது தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னியல் பொருள்களின் உள்ளே பயன்படுத்தப்படும் அதே வகையைச் சார்ந்தது என்று கூறுகிறார் மேகன் லியூ (Megan Liu).

இவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் குழுவொன்றின் முன்னணி ஆய்வாளர்.

மின்கழிவுகளை மறுபயனீடு செய்யும்போது ஏற்படும் தவறுகளால் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் 'flame retardants' நச்சுகளால் மாசுபடுவதாக மேகன் கூறுகிறார்.

உதாரணத்துக்கு ஒரு கறுப்பு நிற 'sushi tray' தட்டு.

அதில் ஒரு மில்லியனுக்கு 11,900 பாகங்கள் decaBDE எனும் தீப்பற்றாமல் தடுக்கும் ரசாயனம் கலந்திருக்கிறது.

அந்த ரசாயனம் பிளாஸ்டிக் சீக்கிரம் எரிந்துவிடாமல் இருப்பதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் polybrominated diphenyl ethers அதாவது PBDE என்ற ரசாயனக் கலவை வகையைச் சேர்ந்தது.

ரத்தத்தில் இந்த PBDE என்ற ரசாயனத்தின் அளவு குறைவாகக் கொண்டவர்களைக் காட்டிலும் அதிகம் கொண்டவர்கள் சராசரியாக 300 விழுக்காடு புற்றுநோயால் மரணமடையும் ஆபத்து இருப்பதாக இந்த ஆண்டு ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டுகிறது.

கறுப்புப் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட சமையலறைக் கரண்டியைப் பயன்படுத்துவதால் ஒருவர் ஒவ்வொரு நாளும் decaBDE ரசாயனத்தால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எனவே கறுப்புப் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட சமையல் சாதனங்களைப் பயன்படுத்தவேண்டாம் என்று CNN செய்தியிடம் கூறுகிறார் ரசாயன நிபுணர் லிண்டா பிர்ன்பாம் (Linda Birnbaum).

ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்