வாழ்வியல் trending
பன்ச் குரங்குக்கு இன்னொரு ரசிகை - Blackpink லீசா
இச்சிகாவா (Ichikawa) நகர விலங்கியல் தோட்டத்தில் பன்ச் (Punch) குரங்கைப் பார்க்கச் சென்றார், பிளாக் பிங் (Blackpink) என்னும் பிரபல இசைக் குழுவைச் சேர்ந்த லீசா (Lisa).
மார்ச் 7ஆம் தேதி பன்ச்சைப் பார்க்கச் சென்றதை லீசா தனது Instagram பதிவில் பகிர்ந்துக்கொண்டார்.
பன்ச்சின் விருப்பமான பொம்மையைப் போன்ற மற்றொரு பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு லீசா புன்முறுவலோடு எடுத்த படம், சமூக வலைத்தளங்களில் பரவலாகியது.
ரசிகர்களும் விலங்கு ஆர்வலர்களும் அந்த அழகான காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
ஏழு மாத மக்காகி (Macaque) குரங்கு பன்ச். பிறந்த சிறிது நேரத்திலேயே தாயால் கைவிடப்பட்டது. மற்ற மக்காகி குரங்குகளாலும் நிராகரிக்கப்பட்டது.
பன்ச்சுக்கு ஆறுதலாக பராமரிப்பாளர்கள் ஒரு மனிதக் குரங்கு பொம்மையைக் கொடுத்தனர்.
பன்ச் அதனுடன் நெருக்கமானது, அதை விட்டுப் பிரியவே இல்லை. இணையவாசிகள் உருகினர். பலர் அதைக் காண விலங்கியல் தோட்டத்துக்குச் சென்றனர்.
ஆனால் இப்போது மற்ற மக்காகி குரங்குகளுடன் பழகுவதற்காகத் தனது பொம்மையை விட்டுவிட்டுச் செல்கிறதாம் பன்ச்.