Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தென் கொரியாவின் 'Blackpink' இசைக்குழுவின் லிசா...சமூக ஊடகத்தில் சாதனை

வாசிப்புநேரம் -

தென் கொரியாவின் மிகப் பிரபலமான 'Blackpink' இசைக்குழுவைச் சேர்ந்த லிசாவின் (Lisa) Instagram கணக்கைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியுள்ளது.

அது குறித்து The Korea Herald தகவல் வெளியிட்டது.

அந்தச் சாதனையைப் படைத்த முதல் தென் கொரியக் கலைஞர் எனும் பெருமை அவரைச் சேரும்.

அத்துடன் அந்த மைல்கல்லை எட்டிய ஆசியாவைச் சேர்ந்த முதல் பெண் கலைஞரும் அவரே!

26 வயதுடைய அவருக்கு உலகெங்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு இவ்வாண்டின் (2023) ஆகப் பிரபலமான தென் கொரியக் கலைஞர் எனும் பட்டத்தை லிசாவுக்கு வழங்கியதாக The Korea Herald குறிப்பிட்டது. 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்