Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Spotify செயலியிலிருந்து பல நூறு இந்திப் பாடல்கள் நீக்கம்

வாசிப்புநேரம் -

பிரபலமான இந்தித் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான பாடல்கள் Spotify இசைச் செயலியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

பழைய ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்றும் பாடல்களின் உரிமையாளர்களுடன் புதிய ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள முடியவில்லை என்றும் Spotify தெரிவித்தது.

அதனால் Spotify செயலியில் பல மில்லியன் முறை கேட்கப்பட்ட, பலருக்கும் விருப்பமான பாடல்கள் நீக்கப்பட்டுவிட்டன.

அது குறித்து இந்தியர்கள் பலரும் அதிருப்தி அடைந்திருப்பதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

இனி பயணங்களில் என்ன செய்வது எனத் தெரியவில்லை என்று Spotify பயனீட்டாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இன்னொருவர் தமது Spotify சந்தாத் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக BBC-யிடம் சொன்னார்.

Zee Music நிறுவனத்துடன் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாக Spotify கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்