Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எலும்பு மஜ்ஜை (Bone Marrow) பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவை

வாசிப்புநேரம் -
எலும்பு மஜ்ஜை (Bone Marrow) பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவை

(படம்: Envato Elements)

எலும்பு மஜ்ஜை (Bone Marrow) குறித்துப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம், படித்திருப்போம்.

ஆனால் அது பற்றிய கேள்விகள் சிலரது மனத்தில் இருக்கக்கூடும்.

அவற்றிற்கு விடையளிக்க விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.

எலும்பு மஜ்ஜை என்றால்?

எலும்பு மஜ்ஜை என்பது எலும்புகளுக்குள் காணப்படும் மென்மையான, கொழுப்புத் திசு.

அதன் முக்கியத்துவம்?

எலும்பு மஜ்ஜையில் இருக்கும் மூல உயிரணுக்கள் (stem cells) சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், ரத்தத் தட்டணுக்கள் ஆகியவற்றை உருவாக்குகின்றன.

அது ரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது; உயிர் வாழ்வதற்குப் பெரும் பங்கு வகிக்கிறது.

- சிவப்பு ரத்த அணுக்கள் oxygen எனப்படும் பிராணவாயுவை உடல் பாகங்களுக்குக் கொண்டுசெல்லும்

- வெள்ளை ரத்த அணுக்கள் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

- ரத்தத் தட்டணுக்கள் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த துணைபுரியும்

எலும்பு மஜ்ஜை தானம் ஏன் தேவைப்படுகிறது?

ரத்த அணுக்கள் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாதபோது, புற்றுநோய் போன்ற சுகாதாரச் சிக்கல்கள் ஏற்படலாம். அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.

எலும்பு மஜ்ஜை தானம் எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

1. நன்கொடையாளரின் ரத்தத்திலிருந்து உயிரணுக்கள் எடுக்கப்பட்டு பின்னர் தேவைப்படுவோரின் உடலில் புகுத்தப்படுகின்றன. சுமார் 90 விழுக்காட்டினர் Peripheral Blood Stem Cells எனும் முறையை மேற்கொள்வதாக எலும்பு மஜ்ஜை தானத் திட்டத்தின் பேச்சாளர் கூறினார்.

2. இடுப்புப் பகுதியில் எலும்பு மஜ்ஜையிலிருந்து ரத்த அணுக்கள் எடுக்கப்பட்டு பின்னர் தேவைப்படுவோரின் உடலில் புகுத்தப்படுகின்றன.

தானம் செய்யப்படும் எலும்பு மஜ்ஜை யாருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்குப் பொருந்துவது முக்கியம். அது போன்று பொருந்துவது அரிது என்று கூறப்படுகிறது.

எலும்பு மஜ்ஜை தானம் செய்வது குறித்து மேல் விவரங்களைப் பெற, கீழ்க்காணும்
இணையப்பக்கத்தை நாடலாம்.

https://bmdp.org/

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்