Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

பயணம் மேற்கொள்ளத் தயாரா? முதலில் எங்கு செல்லத் திட்டம்?

வாசிப்புநேரம் -

நாடுகளின் எல்லைகள் திறந்துவிட்டன...

ஈராண்டாக ஓர் ஓரத்தில் இருந்த கடப்பிதழைப் பயன்படுத்த நேரம் வந்துவிட்டது!

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப் பலர் திட்டமிடுகின்றனர்.

அவர்களில் சிலரின் ஆசைகளை அறிய முற்பட்டது, 'செய்தி'...

பாலி

(படம்: AFP/SONNY TUMBELAKA)

"நான் பாலிக்குச் செல்ல விரும்புகிறேன். அது அழகாகவும், அமைதி சூழ்ந்த இடமாகவும் உள்ளது. அங்கு உல்லாசத் தலத்தில் தங்க மிகவும் ஆசை!," 

- ஃபாத்திமா, 27

"பாலி என்றாலே உல்லாசத்தலம், உணவு, ஓய்வு... எனக்கு அதுதான் விருப்பம்!"

- பல்கிஸ்,  26

ஜப்பான்

"கிருமிப்பரவல் தொடங்குவதற்கு முன்பே அங்கு செல்ல ஆசையாக இருந்தது. எனக்கு ஜப்பானின் கலாசாரம், உணவு மீது அதிக நாட்டம் உண்டு,"

- ஹர்ஷினி,21

ஜெர்மனி

"நான் பயணச்சீட்டுகளை ஏற்கெனவே வாங்கிவிட்டேன்.  சில நண்பர்களைச் சந்தித்து, அண்டை நாடுகளுக்கும் செல்லத் திட்டமிடுகிறேன். நெடுந்தூர நடையில் ஈடுபட விரும்புகிறேன்."

-அருணா, 28

பிரான்ஸ்

"நான் பிரான்ஸுக்குச் செல்ல விரும்புகிறேன். பல ஆண்டுகளாகவே ஐரோப்பாவுக்குச் செல்ல எண்ணியிருந்தேன். இனியும் காத்திருக்க விரும்பவில்லை,"

- அனிதா, 32

ஆஸ்திரேலியா

"புதிய இடங்களைச் சுற்றிப் பார்க்க அது ஓர் அழகான நாடு. இளைப்பாற நிறைய இடங்களும் உள்ளன,"

- கல்ஹாரி, 29

துருக்கி

"இஸ்லாமிய வரலாறு மிகுந்த நாடு. அதைப் பற்றி மேலும் அறிய ஆர்வம் உள்ளது. ஓய்வெடுக்கவும் நல்ல இடம்!"

- ஃபஹிரா, 23

மலேசியா

"கிருமிப்பரவலுக்கு முன் நான் மலேசியாவில் அழகை மெருகேற்றும் சிகிச்சைகளை 
மேற்கொள்வதுண்டு. ஈராண்டுத் தடைக்கு பிறகு, அவற்றை மீண்டும் தொடங்கத் திட்டமிடுகிறேன்,"

- சங்கீதா, 33

இந்தியா

"நான் திருவண்ணாமலைக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்கு ஆன்மிகம் மீது ஆர்வமுண்டு. அங்கு நான் சென்று மூன்று ஆண்டுகளாக ஆகிவிட்டது. மீண்டும் செல்ல விரும்புகிறேன்," 

- பிரதீப், 33

<p>Unsplash/<a href="https://unsplash.com/@peggie_mishra">Peggie Mishra</a></p>

"ஊட்டி மிகவும் அழகான இடம் என்று கேள்விப்பட்டேன். குளிரான மலைப்பகுதியில் தேநீர் அருந்த ஆசையாக உள்ளது. குடும்பத்தோடு இணைந்து பயணம்..."

- ஜேஸ்லின், 28

வாசகர்களில் பலர் இளைப்பாற இடம் தேடுவதைப் போல் தெரிகிறது...

நீங்கள் செல்ல விரும்பும் முதல் இடம் எது?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்