வாழ்வியல் செய்தியில் மட்டும்
பின்னிப் போட்டுக்கொள்ளும் அழகான சடை - அதனால் இத்தனை நன்மைகளா?

(Pinterest / Raghuveer Savaardekar)
இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், உலகிலுள்ள பழங்குடிமக்கள்...
அவர்களது வரலாற்றில் இருக்கும் ஓர் ஒற்றுமை?
Braids என்றழைக்கப்படும் சடை தான்...
பழைமைவாய்ந்த வழக்கமான சடைப் பின்னல் நவீன உலகில் தொடர்ந்து நிலைத்திருக்கிறது...
சடை பின்னுவதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சிங்கப்பூரில் வசிக்கும் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பின்னல் நிபுணர் ஷனெலிடம் பேசியது 'செய்தி'.

பலரும் ஏன் சடை பின்னுகின்றனர்?
- நவீனம்
- முகத்துக்கு அழகு சேர்க்கிறது, முக வடிவத்துக்கு மெருகூட்டுகிறது
- கலாசாரம்
- தனித்துவம் தருகிறது
சிங்கப்பூரில் அதிகம் விரும்பிப் பின்னப்படும் சடைவடிவம்:

இரட்டைச் சடை

தலைமுடி கட்டங்கட்டமாகப் பிரிக்கப்பட்டுப் பின்னப்படும்

வரிசையாகப் பின்னப்படும் பல சடைகள்.

பின்னலின் நன்மைகள்?
💇 ஈரத்தன்மையைப் பாதுகாக்கலாம்
ஜடைப் பின்னல் முடியில் இருக்கும் ஈரத்தன்மையைத் தக்கவைக்க உதவும். முடி காய்ந்ததுபோல் தென்படாது.
💇 முடி கொட்டுவதைத் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்
சடை பின்னுவதால் முடியைத் தலையின் அதேயிடத்தில் நீண்ட நேரம் வைத்திருக்கமுடியும். அது தேவையின்றி அதிகமாக இழுபடாது. அதனால் முடி கொட்டுவதைத் தவிர்க்கலாம்.
💇 மனப்பதற்றம் (anxiety) இருப்பவர்களுக்கு சடை நல்லது
பின்னிய சடையைத் தொட்டுணரும்போது சிலரின் மனத்தில் ஒருவித சாந்தம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
💇 ஆண்களும் தலைமுடியைச் சடையாகப் பின்னலாம்
பெண்கள் மட்டும் சடை பின்னலாம் என்பது இல்லை. ஆண்களும் வெவ்வேறு வடிவங்களில் சடை பின்னி மகிழலாம் என்கிறார் ஷனெல்.