கடற்கரைத் தூய்மைக்கேட்டைச் சமாளிக்க பிரேசிலிய மீனவர்களின் புது முயற்சி
வாசிப்புநேரம் -
(படம்: AFP/Pablo Porciuncula)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரேசிலைச் சேர்ந்த மீனவர் அலெக்சாண்ட்ரே ஆண்டர்சன் (Alexandre Anderson) ரியோ டி ஜெனீரோவின் (Rio de Janeiro) குவானாபாரா (Guanabara) கடற்பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டைச் சமாளிக்கப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
கடற்பகுதியைப் பாதித்துள்ள எண்ணெய்க் கசிவுகள், ரசாயனங்கள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியவற்றைக் காட்டுவதற்கு அவர் காணொளிகளைச் செயலி ஒன்றில் பதவியேற்றம் செய்கிறார்.
அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் மற்ற மீனவர்களும் அவ்வாறே செய்கின்றனர்.
அவர்கள் அரசாங்கச் சார்பற்ற அமைப்பின் உதவியுடன் உருவாக்கப்பட்ட செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
அதன் மூலம் அவர்கள் பெயரை வெளியிடாமல் புகார் அளிக்கின்றனர்.
அந்தத் தகவல்களை நெறியாளர் ஒருவர் உறுதிசெய்த பின்னர் அவை இணையப்பக்கத்தில் வெளியிடப்படும்.
அதனையடுத்து அது மேல் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும்.
Guanabara கடற்பகுதியை அதிகாரிகள் பார்வையிடுவர்.
சென்ற மாதம் (ஜூலை 2024) 26ஆம் தேதி செயலி அறிமுகமானது.
3 வாரங்களில் சுமார் 20 புகார்கள் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டதாகவும் 100க்கும் அதிகமான புகார்கள் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தூய்மைக்கேட்டைச் சமாளிக்க மீனவர்கள் மேற்கொள்ளும் முயற்சி கைகொடுக்கிறது.

ஆதாரம் : AFP