Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிரிட்டனில் சில ஊழியர்களுக்குக் குதூகலம்... அடுத்துவரும் 6 மாதங்கள் வாரத்துக்கு 4 நாள் வேலை - அதே சம்பளம்!

வாசிப்புநேரம் -

பிரிட்டனிலுள்ள 30 நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அடுத்த 6 மாதங்கள் வாரத்துக்கு 4 நாள் வேலை!

அவர்களுக்கு அதே சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  மக்கள், வேலை-வாழ்க்கைச் சமநிலையை அடைவார்களா என்பதைச் சோதித்துப் பார்க்க அத்தகைய முன்னோடித் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

இருப்பினும் அதுபோன்ற வேலை ஏற்பாட்டினால் ஊழியர்களுக்குக் கூடுதல் மனவுளைச்சல் ஏற்படலாம் என்று சிலர் எச்சரித்துள்ளனர். ஐந்து நாள் வேலையை 4 நாள்களில் திணித்து அதை முடிக்கப் பலரும் சிரமப்படலாம் என்பதே அவர்களது கவலை.

4 Day Week Global என்ற அந்த முன்னோடித் திட்டத்தின் மேலாளர் அத்தகைய ஏற்பாடு இந்த ஆண்டில் வேலைச்சூழலில் புதியதோர் எதிர்காலத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்டார். 

அத்தகைய முன்னோடித் திட்டங்கள் அமெரிக்கா, கனடா, அயர்லந்து,  ஆஸ்திரேலியா, நியூஸிலந்து போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

ஸ்பெயின், ஸ்காட்லந்து போன்றவற்றில் அதுபோன்ற திட்டம் ஏற்கனவே நடப்பில் உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்