Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

இந்தியாவின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய பிரிட்டிஷ் ஆடவர்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய பிரிட்டிஷ் ஆடவர்
Instagram/indogenius

இந்தியா T20 கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்ற உற்சாகத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நிக் பூக்கர் (Nick Booker) என்ற பிரிட்டிஷ் ஆடவர்.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி அவர் கொண்டாடிய காணொளி இப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

காணொளியை நிக் தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் காரிலிருந்தபடி இந்தியக் கொடியை அசைத்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

அவரைச் சுற்றி ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் வெற்றியைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

"இந்தியா உலகக்கிண்ணம் வெல்லும்போதெல்லாம் நான் இங்கே வந்து கொண்டாடியுள்ளேன். முதல்முறையாக 2007ஆம் ஆண்டு கொண்டாடினேன். இது எனக்கு ஒரு பாரம்பரியமாகவே மாறிவிட்டது!" என்கிறார் நிக். 

ஒரு வெளிநாட்டவர் இந்தியக் கொடியை ஏந்தி இந்தியர்களோடு ஒருவராகக் கலந்து இப்படி ஆரவாரம் செய்வது பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாய் இருப்பதாக இணையவாசிகள் பாராட்டுகின்றனர்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்