அமெரிக்காவில் அதிகம் உண்ணப்படும் பர்கர் (burger)... 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியாவில் உருவாகியிருக்கலாம்!
அமெரிக்காவில் அதிகம் உண்ணப்படும் பர்கர் எனும் உணவு முதன்முதலில் மங்கோலியாவில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவ்வாறு கூறுகிறார் "Hamburger America" எனும் பர்கர் தொடர்பிலான ஆவணப்படத் தயாரிப்பாளர் ஜார்ஜ் மோட்ஸ் (George Motz). அவர் 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பர்கர்களைச் சுவைத்திருக்கிறார். ஆவணப்படத்துக்குத் தேவையான ஆய்வுகளையும் நடத்தியுள்ளார்.
அவர் கூறுவது என்ன?
13ஆம் நூற்றாண்டில் மங்கோலியாவில் பர்கர் உருவாகியிருக்கலாம்.
- அங்குள்ள சிலர் சமைக்கப்படாத இறைச்சியை உண்ண விரும்பினர். நாள் முழுதும் சமைக்கப்படாத இறைச்சியை அவர்களது குதிரைகளில் ஏற்றிப் பயணம் செய்திருப்பதாக நம்பப்படுகிறது.
- செல்லும் வழியில் அந்த இறைச்சியைச் சூடாக்கி, அதனை வெட்டி, காரம் சேர்த்து உண்டனர் என்றும் கூறப்படுகிறது.
- கடற்துறையினர் மூலம் அந்த உணவு வகை ஐரோப்பாவை எட்டியது. பல நூற்றாண்டுகளுக்குப் பின் ஜெர்மனியிலுள்ள ஹம்பர்க் (Hamburg) துறைமுகத்தை அந்த உணவுவகை சென்றடைந்தது.
- அங்கு, இறைச்சி சமைக்கப்பட்டுச் சிறுதுண்டுகளாய் வெட்டப்பட்டு மிக மலிவான விலைக்கு விற்கப்பட்டது.
அங்கிருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அந்த உணவுவகை அமெரிக்காவைச் சென்றடைந்தது.
அப்போது Hamburg இறைச்சி என்று அழைக்கப்பட்ட அந்தவகை இறைச்சி, ரொட்டித் துண்டுகளுக்கிடையில் வைக்கப்பட்டு Hamburg Sandwich என்று அழைக்கப்பட்டது.
அதன் பின்னரே பெயர் Hamburger என்று உருமாறியது.