Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

விரும்பிய பொருள்களை இப்போதே பெற்று, பணத்தைப் பின்னர் கொடுக்கும் கட்டணமுறையைப் பயன்படுத்துகிறீர்களா?

வாசிப்புநேரம் -

Buy Now Pay Later (BNPL) கட்டணமுறை பல விற்பனைத் தளங்களில் அறிமுகமாகியுள்ளது. 

அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள மூத்த நிதி ஆலோசகர் சுமித்தாவிடம் 'செய்தி' பேசியது.

Sumita Financial Planner

BNPL கட்டணமுறை என்றால்?

வாடிக்கையாளர்கள் தளத்திலிருந்து வேண்டிய பொருள்களைப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கான கட்டணத்தைப் பிறகு செலுத்தும் செயல்முறை அது. 

அல்லது தவணை முறையில், வட்டி இல்லாமல் கட்டணத்தைச் சிறிய பகுதிகளாகச் செலுத்தும் முறையாகவும் அது அமையலாம். 

வாங்கிய பொருள்களுக்கான முழுக் கட்டணத்தையும் சுமார் ஒரு மாதத்துக்குள் செலுத்தவேண்டியிருக்கும். 

hoolah
(Hoolah)

BNPL அளிக்கும் நன்மைகள்?

  • அவசரமாக எதையாவது வாங்கவேண்டிய நிலையில் அதற்கான பணம் இல்லாவிட்டால், அதை இந்தக் கட்டணமுறையின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்
  • BNPL திட்டத்தின்கீழ் தவணைமுறையில் பொருள்களுக்குக் கட்டணம் அளிக்கும்போது அதற்கு வட்டியும் சேர்த்துத் தரத் தேவையில்லை. 

BNPL கட்டணமுறையினால் ஏற்படக்கூடிய தீமைகள்?

  • உங்களிடம் இருக்கும் பணத்தைவிட அதிகம் செலவிடத் தூண்டக்கூடியது
  • விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற உணர்வு இல்லாமல் போய்விடலாம் 

BNPL கட்டணமுறையால் பெரிய அளவில் பணத்தைச் செலவிடாமல் இருப்பது எப்படி? 

shopping

  • தனிப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தைத் தீட்டவேண்டும்; அதனை முறையாகப் பின்பற்றவேண்டும்
  • குறிப்பிட்ட அளவை மட்டுமே பொருள்கள் வாங்குவதற்கு ஒதுக்கி அதன்படி நடந்துகொள்ளவேண்டும்
  • உங்களால் அத்தகைய முறையில் செலவுசெய்ய இயலாவிட்டால், BNPL கட்டணமுறையைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. 

யாரெல்லாம் BNPL கட்டணமுறையைத் தவிர்க்கவேண்டும்?

  • மாணவர்கள்
  • முழுநேர வேலையில் இல்லாதவர்கள்
  • குறைவான சம்பளம் பெறுபவர்கள்

BNPL கட்டணமுறையைப் பயன்படுத்துவோருக்கான ஆலோசனை?

budget

  • செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது
  • மிகக் கவனமாகப் பொருள்களைத் தெரிவுசெய்து செலவு செய்யுங்கள்
  • செலவுகளைக் குறித்துக்கொள்ளுங்கள்
  • தவணைமுறையில் பொருள்களுக்குக் கட்டணம் செலுத்துவோர் ஒவ்வொரு கட்டணத்துக்கும் இடையில் அதிக இடைவெளி இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்... 
  • பொருள்களை வாங்குவதற்கு முன்னர் அது அத்தியாவசியமானதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்