Skip to main content
தூக்கப் பற்றாக்குறையா? Magnesium உதவுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

தூக்கப் பற்றாக்குறையா? Magnesium உதவுமா?

வாசிப்புநேரம் -
சுகாதாரத்தை மேம்படுத்த பலர் சத்து மாத்திரைகளை (supplements) உட்கொள்கிறார்கள். அதில் தற்போது பிரபலமாக வந்திருப்பது மாக்னீசியம் (magnesium) மாத்திரைகள்.

தூக்கமின்மைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அது உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் அது மட்டும்தானா தீர்வு?

BBC ஊடகம் அதைப் பற்றி விசாரணை நடத்தியது.

பொதுவான மனநலனுக்கு மாக்னீசியம் மிகவும் முக்கியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

தூக்கப் பற்றாக்குறையை மட்டுமில்லை; மற்ற உடலுறுப்புகளில் இருக்கும் வலியையும் தீர்க்க அது உதவுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் எப்போது சத்து மாத்திரையாக மாக்னீீசியத்தை உட்கொள்ளவேண்டும்?

மாக்னீசியப் பற்றாக்குறை உடலில் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவ்வாறு செய்யவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.

சிறுநீரகத்தில் பிரச்சினைகள் இருந்தால் கூடுதல் மாக்னீசியம் உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்