Roller coaster சவாரியால் மூளைப் பாதிப்பு ஏற்படுமா?
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Roller coaster சவாரியால் மூளைப் பாதிப்பு ஏற்படுமா?
வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன.
அண்மையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் பிரபல roller coaster சவாரி ஒன்று நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
காரணம்? அதில் சென்ற சிலருக்கு மூளைப் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்...
2004ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில், roller coaster சவாரியின்போது ஏற்பட்ட நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் ஆராயப்பட்டன.
அமெரிக்க தேசிய சுகாதார ஆய்வுக் கழகத்தின் கீழ் இயங்கும் உயிரியல் மருத்துவத் தகவல் தளமான Pubmedஇல் அது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆராயப்பட்டனர்.
அவர்களுள் Roller coaster சவாரியால் ஏற்பட்ட பிரச்சினைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இருப்பினும், மூளை அதிர்ச்சி (Concussion) போன்ற கடுமையான பிரச்சினைகள் சில வேளைகளில் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
Roller coaster சவாரியில் சென்ற பிறகு, மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவது அரிது என்று மற்றோர் ஆய்வு சொல்கிறது.
ஏற்கெனவே தலை தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்கள், சவாரிக்குப் பிறகு நரம்பியல் சம்பந்தப்பட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்பிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சவாரியில் ஏற்படும் தாக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம் என்று சொல்லப்பட்டது.
ஒரே roller coaster சவாரியில், அருகருகே அமர்ந்து சென்ற இருவரின், தலை அசைவு, மூளையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் பதிவாகின.
இந்த வேறுபாடு 63 விழுக்காடு வரை இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உடல் அமைப்பு, கழுத்தின் வலிமை போன்ற தனிநபர் வேறுபாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டினர்.
உடனடி மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருந்தாலும், நீண்டகால பாதிப்புகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : Others