காலணிகள்... கலைப்படைப்பு அல்ல: ஜெர்மானிய நீதிமன்றம்
வாசிப்புநேரம் -

படம்: AP Photo/Michael Probst
ஜெர்மனியின் மத்திய நீதிமன்றம் காலணிகளைக் கலைப்படைப்பாகக் கருதமுடியாது என்று கூறியுள்ளது.
Birkenstock என்ற பிரபலக் காலணித் தயாரிப்பு நிறுவனம் அதன் செண்டல் (sandal) வகைக் காலணிகளைப்போல 3 போட்டி நிறுவனங்களின் காலணிகள் உள்ளதாக வழக்குத் தொடுத்தது.
மேலும், தனது காலணிகளைப் பதிப்புரிமை கொண்ட கலைப்படைப்புகள் என்று கூறும் Birkenstock, மற்ற நிறுவனங்கள் அதன் காலணிகளின் வடிவமைப்பைப் பயன்படுத்தக்கூடாது என்று முறையிட்டது.
ஜெர்மானிய சட்டத்தில் கலைப்படைப்புகளுக்கான பதிப்புரிமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
அதன் அடிப்படையில் தனது காலணிகளைப் போன்று போட்டி நிறுவனங்கள் காலணிகள் தயாரிப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்று Birkenstock கோரியது.
அத்துடன் ஏற்கெனவே விற்பனையில் உள்ள அத்தகைய காலணிகளைக் கடைகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அது கேட்டுக்கொண்டது.
ஆனால் நீதிமன்றம் ஒரு பொருளைக் கலைப்படைப்பாகக் கருத அதன் வடிவமைப்பில் தனித்தன்மை இருப்பது அவசியம் என்று விளக்கம் தந்தது.
எனவே காலணிகளைக் கலைப்படைப்பாகக் கருதிப் பதிப்புரிமை வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆதாரம் : AP