தவறவிட்ட தூக்கத்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூங்கிச் சரிசெய்ய முடியுமா?
வாசிப்புநேரம் -
படம்: envato.com
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிலர் வார நாள்களில் அதிக வேலை காரணமாகச் சரியான நேரத்துக்குத் தூங்கியெழச் சிரமப்படுவார்கள்.
ஆனால் அப்படி பாதிக்கப்பட்ட தூக்கத்தை வாரயிறுதி விடுமுறையின்போது ஒரே நாளில் தூங்கிச் சரிசெய்து விட நினைப்பார்கள். அவ்வாறு சிலர் செய்தும் உண்டு.
வார நாள்களில் கிடைக்காத தூக்கத்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூங்கிச் சரிசெய்ய முடியுமா?
மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டது 'செய்தி'.
அப்படிச் செய்ய முடியாது என்கிறார் காது, மூக்குத் தொண்டை மருத்துவரும் தூக்க நிபுணருமான டாக்டர் சோமசுந்தரம்.
அது உடலை மேலும் சோர்வடையச் செய்யும் என்கிறார் அவர்.
வயதுக்கேற்ற தூக்கம் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒருவர் வயதுகேற்ப எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை பரிந்துரைத்திருக்கிறது Mayoclinic இணையத்தளம்:
🛌🏻 4 முதல் 12 மாதக் குழந்தை - 12 முதல் 16 மணி நேரம்
🛌🏻 1 முதல் 2 வயது வரை - 11 முதல் 14 மணி நேரம்
🛌🏻 3 முதல் 5 வயது வரை - 10 முதல் 13 மணி நேரம்
🛌🏻 6 முதல் 12 வயது வரை - 9 முதல் 12 மணி நேரம்
🛌🏻 13 முதல் 18 வயது வரை - 8 முதல் 10 மணி நேரம்
🛌🏻 பெரியவர்கள் - இரவில் 7 அல்லது 8 மணி நேரம்
அடிக்கடி 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்கியெழும் பெரியவர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம்.
உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, பக்கவாதம், மன அழுத்தம் ஆகிய பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்கலாம்.
எனவே ஒவ்வொரு நாளையும் கடக்க நல்ல தூக்கத்தோடு, சத்தான உணவு, குறைந்தது 20 நிமிட உடற்பயிற்சியும் அவசியம் என்பதை டாக்டர் சோமசுந்தரம் வலியுறுத்தினார்.