Skip to main content
காலணிகளைச் சலவை இயந்திரத்தில் அலசுவது சாத்தியமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

காலணிகளைச் சலவை இயந்திரத்தில் அலசுவது சாத்தியமா?

வாசிப்புநேரம் -
காலணிகள் அழுக்காகி நிறம் மாறும்.

அப்போது அவற்றை ஓரமாக வைத்துவிட்டுப் புதிய காலணியை வாங்க ஆசைப்படுவோம்.

இல்லையெனில் அவற்றை அலசிப் புதுப்பொலிவு கொடுக்க விரும்புவோம்.

ஆனால் எல்லாக் காலணிகளும் ஒரே மாதிரி உற்பத்தி செய்யப்படுவதில்லை.

சில காலணிகளைச் சலவை இயந்திரத்தில் அலசலாம், வேறு சிலவற்றுக்கு மற்றொரு அணுகுமுறை தேவைப்படலாம்.

காலணிகள் செயற்கை இழை, துணி, பருத்தி போன்றவற்றைக்கொண்டு செய்யப்பட்டால் அவற்றை இயந்திரத்தில் அலசலாம்.

காலணிகளை இயந்திரத்தில் போடுவதற்கு முன்பு என்ன செய்யவேண்டும்?

ஒரு வாளியில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் சிறிதளவு சவர்க்காரத்தைச் சேர்த்து காலணிகளைத் தேய்த்துக் கழுவவேண்டும்.

காலணிக் கயிறுகளையும் (shoelaces) உள்பட்டையையும் (insole) அகற்றவேண்டும்.

காலணிகளை அலசியதும் அவற்றை அதிக நேரத்திற்கு உலர்த்தவேண்டும்.

சலவைத்தூளைவிட திரவ சவர்க்காரத்தைப் (Liquid Detergent) பயன்படுத்துவதே சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

தோல் பொருள்களால் உருவாக்கப்பட்ட காலணிகளைக் கையால் அலசவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

காலணிக் கயிறுகளையும் உள்பட்டையையும் எவ்வாறு அலசுவது?

காலணிகளை இயந்திரத்தில் அலசும்போது கயிறுகளையும் சேர்த்துச் சுத்தம் செய்யலாம்.

உள்பட்டையில் உள்ள துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவை (Baking Soda) சேர்ப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

காலணிகளைக் காயவைக்க எது சிறந்த வழி?

நேரடியாக வெயிலில் காயவைப்பது காலணியைச் சுருங்கச் செய்யும். அதன் வடிவமும் மாறலாம்.

துணி உலர்த்தி எனும் dryer… இதைப் பயன்படுத்துவதால் காலணிகள் சேதமடையக்கூடும்.

அதனால் நீண்டநேரத்திற்கு நிழலில் காயவைப்பதே மிகச்சிறந்தது.


 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்