தலைகீழாகச் சிக்கிய பூனை... 5 நாள்களுக்குப் பின் மீட்பு!
வாசிப்புநேரம் -
படம்: John DeBacker via AP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
முகமூடியோ மேலங்கியோ இல்லை.
ஆனால் ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரை ஜான் டிபேக்கர் (John DeBacker) ஒரு நாயகன்!
நியூயார்க் (New York) அருகே வீட்டுச் சுவருக்குள் சிக்கிய ‘லோலா’ (Lola) என்ற பூனையை அவர் உயிருடன் மீட்டுள்ளார்.
குடும்பத்தினர் வீட்டை மாற்றிக்கொண்டிருந்தபோது லோலா தரைப்பலகைக்குக் கீழே புகுந்தது.
பின்னர் அது கீழே விழுந்து, முதல் மாடிச் சுவருக்குப் பின்னால் சிக்கிக்கொண்டது.
சுமார் ஐந்து நாள்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் அது அங்கே இருந்தது.
பெரும்பாலான நேரம் தலைகீழாகச் சிக்கியிருந்ததாக நம்பப்படுகிறது.
பசியால் சுவருக்குள் இருந்த காப்புப் பொருளையும் அது சாப்பிட்டது.
15 ஆண்டுகளாகப் பூனைகளை மீட்டுவரும் திரு டிபேக்கர் உதவிக்கு அழைக்கப்பட்டார்.
சுவரை வெட்டத் தொடங்கிய குழுவினர், சிறிய கேமரா மூலம் லோலாவைக் கண்டனர்.
பூனை மேலும் உள்ளே சென்றுவிடாமல் இருக்கச் சத்தமிடாத துளையிடும் கருவியைப் பயன்படுத்தினர்.
சிறிய துளைக்குள் கையைவிட்ட திரு டிபேக்கர், லோலாவின் பின்னங்கால்களைப் பிடித்து மெதுவாக வெளியே இழுத்தார்.
தூசியுடன் களைத்திருந்த லோலா உடனடியாகக் கால்நடை மருத்துவரிடம் கொண்டுசெல்லப்பட்டது.
இப்போது அது மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளது.

ஆதாரம் : AP