Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'துணிந்து இறங்கினேன்'- தோல் நிறத்துக்கு ஏற்ற உதட்டுச் சாயம் விற்கும் பெண்

#CelebratingSGWomen

வாசிப்புநேரம் -

#CelebratingSGWomen

காலம் மாறிவிட்டது...

பெண்களும் காலத்துக்கேற்ப பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். நடை உடை பாவனை ஆகிய அனைத்தையும் மாற்றி நவீன உலகில் வாழும் நம் இந்தியப் பெண்கள் ஒப்பனையின்போது சில சிரமங்களைச் சந்திப்பதுண்டு.

அத்தகையோருக்குத் தேவையானதை விற்போமே என்று 'துணிந்து இறங்கிய'
ஒரு பெண்ணிடம் பேசியது 'செய்தி'.

அதற்குத் தீர்வுகாணும் வண்ணம், அனைத்துத் தோல் நிறங்களுக்கும் ஏற்ற சில உதட்டுச் சாய நிறங்களை உருவாக்கி, அதை வெற்றிகரமாக விற்று விற்கிறார்.

தொழிலில் சவால்....

  • முக ஒப்பனைப் பொருள்களுக்கான சந்தையில் பல்வேறு பிரபல நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன. அவற்றை விட Calithea வேறுபட்டது, தரமானதும் கூட எனக் காட்டவேண்டிய சூழல்.
  • இணையத்தளத்தை உருவாக்குவது, பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது போன்றவற்றையும் ஒற்றை ஆளாகச் செய்ய வேண்டியிருந்தது.

சமாளித்தது எப்படி?

  • அனைத்துத் தோல் நிறம் கொண்ட பெண்களுக்கும் ஏற்ற உதட்டுச் சாயங்களை விற்பதன் மூலம் என் நிறுவனத்தை வேறுபடுத்திக் காட்டினேன்.
  • நிறுவன வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிக்க நேரம் வகுத்துச் செயல்பட்டேன்.

ஒரு பெண்ணாக என்னென்ன சவால்கள்?

இந்தியப் பெண்கள் மீது பல எதிர்பார்ப்புகள் சுமத்தப்படுகின்றன... எப்போது திருமணமாகவேண்டும், எவ்வாறு உடை உடுத்தவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என நீளமான பட்டியல் உண்டு.

ஆனால் அவற்றைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனேயே வாழ்ந்துவிடக்கூடாது. அது மனத்தளவில் மகிழ்ச்சி அளிக்காது.

எனக்கு எது வெற்றியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றதோ, அவற்றையே செய்ய முற்படுகிறேன்.

கூற விரும்புவது?

பெண்கள் தம்மைப் போன்றோருக்கு ஆதரவளித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லவேண்டும்.

நம் மீது சுமத்தப்பட்டுள்ள எதிர்பார்ப்புகள் சில நேரத்தில் நமக்கு நன்மை அளிப்பதில்லை... அவற்றைப் புறந்தள்ளுவதில் தவறில்லை.

தமது பயணம் தொடர்ந்து மற்ற பெண்களின் வாழ்வில் அழகிய நிறங்களைச் சேர்க்கும் என்று நம்புகிறார் சத்தியபிரியா.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்