தாய்க்கோழியும் குஞ்சுகளும் சாலையைக் கடக்க உதவிய வாகனமோட்டிகள்
தாய்க்கோழி ஒன்று தன்னுடைய குஞ்சுகளுடன் சாலையைக் கடக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அவை சாலையைப் பாதுகாப்பாகக் கடக்க வாகனமோட்டிகள் வழிவிட்டனர்.
மனத்தை நெகிழ வைக்கும் அந்தச் சம்பவம் அப்பர் தாம்சன் ரோட்டில் (Upper Thomson Road) நடந்தது.
சாலையில் வந்த லாரி ஒன்று..
அதற்கு முன்னால் தாய்க்கோழியும் அதன் குஞ்சுகளும்..
கோழிக்குஞ்சுகள் முன்னே செல்லாமலிருக்கத் தாய் உடனடியாகச் சுற்றி ஓடித் தடுக்க முயன்றது.
பிறகு தன்னுடைய குஞ்சுகளைப் பாதுகாப்பாகச் சாலையோரத்திற்கு அழைத்துச் சென்றது தாய்க்கோழி.
வாகனமோட்டிகள் அவற்றுக்கு உதவுவது அந்தக் காணொளியில் பதிவானது.
லாரியில் அமர்ந்திருந்த பயணி தம்முடைய கைகளை நீட்டி மற்ற வாகனங்களிடம் கோழிக்கும் குஞ்சுகளுக்கும் வழிவிடும்படி சொன்னார்.
2 மோட்டார்சைக்கிளோட்டிகளும் அதைப் பார்த்து மெதுவாக வந்தனர்.
அந்தப் பதிவிற்குப் பல இணையவாசிகள் கருத்துத் தெரிவித்தனர்.
பலர் வாகனமோட்டிகளின் செயலைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.