Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பள்ளிக்குப் பிள்ளைகள் நடந்து செல்கிறார்களா? சிறப்பு என்கிறது ஓர் ஆய்வு

வாசிப்புநேரம் -

பள்ளிக்கு நடந்து செல்லும் பிள்ளைகள்  பிற்காலத்திலும் துடிப்பாகச் செயல்படலாம் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் Preventive Medicine Reports எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. 

2009ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் 587 குடும்பங்களிலிருந்து 3 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள் பங்கேற்றனர்.

பள்ளிக்கு நடந்து செல்லும் பிள்ளைகளில் முக்கால்வாசியினர்  2 முதல் 4 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றியதாக ஆய்வில் தெரியவந்தது.

பள்ளிக்கு நடந்து செல்லாத பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் பள்ளிக்கு நடந்து செல்லும் பிள்ளைகள் பிற்காலத்திலும் அவ்வாறு செய்யும் சாத்தியம் 7 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டது.

அமெரிக்காவில் தற்போது சுமார் 11 விழுக்காட்டுச் சிறுவர்கள் மட்டுமே பள்ளிக்கு நடந்துசெல்கின்றனர் அல்லது சைக்கிளை ஓட்டிச் செல்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆதாரம் : New York Times

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்