வானத்தில் தோன்றிய நெருப்பு வளையம்
வாசிப்புநேரம் -
சிலியில் (Chile) ஒரு கண்கொள்ளாக் காட்சி தோன்றியது.
அங்கு வளையம் போன்ற தோற்றத்தைக்கொண்ட சூரியக் கிரகணத்தை ரசிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்தது.
ஈஸ்ட்டர் தீவிலும் அர்ஜெண்டினா, சிலி, ஆகியவற்றின் சில பகுதிகளிலும் வானத்தில் நெருப்பு வளையத்தைப் போன்ற காட்சியை மக்கள் கண்டுரசித்தனர்.
சந்திரன் அதன் சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து சற்றுத் தொலைவில் செல்லும்போது அந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.
அதாவது சந்திரனும் சூரியனும் ஒரே பாதையில் வரும்போது சந்திரனால் தனக்குப் பின்னால் வரும் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது.
அதன் காரணமாகச் சூரியனின் விளிம்புகள் நெருப்பு வளையம்போல் தெரியும்.
இந்தக் கிரகணம் பெரும்பாலும் பசிபிக் கடற்பகுதியின்மேல் ஏற்படுவதுண்டு.
பிரேசில், பராகுவே, உருகுவே, ஹவாயி (Brazil, Paraguay, Uruguay, Hawaii) உள்ளிட்ட பல இடங்களிலிருந்து சூரியக் கிரகணத்தைக் காணலாம்.
சூரியக் கிரகணம் ஒரு வருடத்தில் 2 முதல் 5 முறை நிகழ்கிறது.
கடந்த ஏப்ரலில் முழுமையான சூரியக் கிரகணம் நிகழ்ந்தது.
நிலவு சூரியனை மறைத்துச்செல்லும் பாதை பசிபிக் நாடுகளில் தொடங்கி மெக்சிகோ, அமெரிக்கா, கனடா வரை சென்று பார்வையாளர்களை அதிசயத்தில் ஆழ்த்தியது.

ஆதாரம் : Others