வாழ்வியல் trending
சீனாவில் கல்யாணம் செய்து வைக்கும் மருத்துவமனை
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
திருமணம் செய்துகொள்ள விருப்பமா?
ஒரு மருத்துவமனைக்குச் சென்று கூடப் பதிவுசெய்யமுடியும்..சீனாவில்.
ஷான்டோங்கில் (Shandong) உள்ள மகப்பேறு, சிறார் மருத்துவமனையில் திருமணப் பதிவுச் சேவை வழங்கப்படுகிறது.
அது இம்மாதத் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரே இடத்தில் திருமணப் பதிவுசெய்வதோடு அதற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை, மகப்பேறு ஆலோசனை ஆகியவற்றைப் பெற்றுவிடலாம்.
சீனா கடந்த ஆண்டு மே மாதம் அதன் திருமணப் பதிவு நடைமுறையைத் தளர்த்தியது.
இனி எங்கு வேண்டுமென்றாலும் திருமணத்தைப் பதிவுசெய்யமுடியும்.
அதையடுத்து ஆலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருமணப் பதிவுச் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அண்மையில் ஒரு ரயில் நிலையம், விமான நிலையத்திலும் அத்தகைய சேவை கொண்டு வரப்பட்டது.
தம்பதிகளைத் திருமணம் புரிய ஊக்குவிப்பதற்கு அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக South China Morning Post நாளேடு நம்புகிறது.
இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்துரைத்தனர்.
"அடுத்து, காவல் நிலையம், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் சேவை இருக்கவேண்டும். அனைவருக்கும் சுலபமாக இருக்கும்," என்று சிலர் பதிவிட்டனர்.

ஆதாரம் : South China Morning Post